»   »  அமலாபாலுக்கு பாலியல் தொல்லை... சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது!

அமலாபாலுக்கு பாலியல் தொல்லை... சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது!

Posted By:
Subscribe to Oneindia Tamil
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை குடுத்த தொழிலதிபர் கைது

சென்னை : நடிகை அமலாபால், கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். தமிழ், மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் அமலாபால் போலீசில் ஒருவர் மீது புகார் செய்துள்ளார்.

தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், போலீஸில் புகார் செய்தார்.

நடிகை அமலாபால் அளித்த புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்தனர்.

நடிகை அமலாபால்

நடிகை அமலாபால்

நடிகை அமலாபால் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். டைரக்டர் விஜய்யை திருமணம் செய்த இவர் பின்னர் விவாகரத்து பெற்றார். புதுச்சேரி முகவரியில் சொகுசு கார் வாங்கிய வழக்கில் ரூ.20 லட்சம் வரி ஏய்ப்பு செய்ததாக சமீபத்தில் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது

கைது

இந்த வழக்கில் அமலாபால் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரான அமலாபாலை போலீசார் கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

டான்ஸ் நிகழ்ச்சியில் அமலாபால்

டான்ஸ் நிகழ்ச்சியில் அமலாபால்

வரும் பிப்ரவரி 3-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள 'டான்சிங் தமிழச்சி' என்ற பெண்களுக்கான கலைநிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார். இதற்காக அமலாபால் உள்ளிட்ட நடிகைகள் பலரும் நடனப்பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

டான்ஸ் பயிற்சி

டான்ஸ் பயிற்சி

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடிகை அமலாபாலும் கடந்த சில தினங்களாகவே தி.நகரில் உள்ள ஸ்ரீதர் மாஸ்டரின் டான்ஸ் ஸ்கூலில் தீவிரமாக நடனப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்நிலையில், கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அழகேசன் என்பவர் தன்னிடம் பாலியல் ரீதியான அணுகுமுறையோடு பேசியதாகவும், பாலியல் தொல்லை கொடுப்பதாகவும் நடிகை அமலாபால் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

தொழிலதிபர் கைது

தொழிலதிபர் கைது

அமலாபாலின் புகாரின் பேரில் கொட்டிவாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் அழகேசனை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்மீது பெண்ணின் மாண்புக்கு களங்கம் கற்பித்தல், பாலியல் தொல்லை கொடுத்தல், பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

English summary
Actress AmalaPaul, divorces her husband and lives alone. Amalapaul filed a complaint against industrialist, who spoken to sexually approach her. Police arrested an industrialist from Kottivaakkam on the complaint filed by Amalapaul.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil