»   »  'என்னோட கனவுலகத்துக்கே வந்துட்டேன்..!' - செம குஷியில் அமலாபால்!

'என்னோட கனவுலகத்துக்கே வந்துட்டேன்..!' - செம குஷியில் அமலாபால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சிவகார்த்திகேயனுக்கு வில்லி சிம்ரன்?- வீடியோ

லடாக் : நடிகை அமலாபால் ஷூட்டிங் இல்லாத நாட்களைக் கொண்டாட இமயமலைப் பக்கம் சென்றுள்ளார். லடாக் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றிப் பார்த்த அமலாபால் அங்கு எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

ஒரு பக்கம் சொகுசு கார் வாங்கி அதைப் போலி முகவரி கொடுத்துப் பதிவு செய்த சர்ச்சை சுழன்று அடித்துக்கொண்டு இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கொஞ்சமும் கவலைப்படமால் லடாக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் நடிகை அமலாபால்.

Amalapaul visits ladakh

சில நாட்களுக்கு முன்பு கேரளாவின் சுற்றுலாத் தளங்கள், ஏரியில் படகு சவாரி என ஜாலியாக சுற்றினார் அமலாபால். இப்போது லடாக்கிற்கு வந்து சுற்றிப்பார்த்த அமலாபால், 'எனது கனவு உலகிற்கே வந்துவிட்டேன் என நினைக்கிறேன்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

Baby, its cold outside. #ladakhdiaries #holidayinthehills #traveller #himalayas #gypsyspirit

A post shared by Amala Paul 🌙⭐️☀️ (@dreamcatcher_ams) on Nov 17, 2017 at 3:49am PST

மேலும் அங்குள்ள பகுதிகளை ஒன்று விடாமல் விசிட் அடித்த அமலாபால், அங்குள்ள இளம் துறவிகளை சந்தித்ததையும், அவர்களின் புன்னகை தனக்கு கிடைத்ததையும் பாக்கியமாக கருதுகிறாராம். அமைதியைத் தேடியே இந்த சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார் அமலாபால்.

இயக்குநர் ஏ.எல்.விஜய்யுடனான விவாகரத்து, தன்னைச் சுற்றும் சிக்கல்கள் எல்லாவற்றையும் மறந்து மன அமைதிக்காக இப்படி சுற்றி வருகிறாராம் அமலா பால். மீண்டும் படங்களில் நடித்து வரும் இவர் 'திருட்டு பயலே 2' படத்தை எதிர்பார்த்து வருகிறார்.

Shine back to the moon When he never ceases Even in the darkest of nights, why would you? #LadakhDiaries #Himalayas #HippieHeart #Loveandpeace

A post shared by Amala Paul 🌙⭐️☀️ (@dreamcatcher_ams) on Nov 20, 2017 at 5:04am PST

English summary
Actress Amala Paul has gone to the Himalayas to celebrate shoot free days. Amala paul looked around the areas including Ladakh and uploaded the photos on her Instagram page.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil