»   »  வடிவேலு - சதா ஜோடிக்கு சுத்திப்போடுங்கப்பா... அவ்ளோ திருஷ்டியாம்!

வடிவேலு - சதா ஜோடிக்கு சுத்திப்போடுங்கப்பா... அவ்ளோ திருஷ்டியாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

எலி படத்தில் வடிவேலுவுடன் ஆட்டம் போட்ட சதாவைப் பார்த்து பொறாமையில் பொசுங்கி போயுள்ளனராம் ஏராளமானோர். காரணம் அழகான சதாவின் அட்டகாசமான ஆட்டம்தானாம்.

எலிக்கு ஏற்றம் வந்தால் எட்டு ஊருக்கு கட்டு சோறு கேட்குமாம்... ஆனால் காமெடியன்கள் ஹீரோவாக நடித்தால் சொல்லவே வேண்டாம் ரம்பை, மேனகை எல்லாம் தனக்கு ஜோடியாக வேண்டும் என்று தயாரிப்பாளரிடமும், இயக்குநரிடமும் கண்டிசன் போடுவார்கள்.


இது தமிழ் சினிமா உலகில் காலம் காலமாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இன்றைய காமெடியன்கள் மட்டும் விதிவிலக்கா என்ன?


இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தில் ஸ்ரேயா ஒரு பாடலுக்கு வடிவேலு உடன் ஆட்டம் போட்டார். ரஜினியுடன் ஜோடி சேர்ந்த பெண் தன்னுடன் நடித்து விட்டாரே என்று அசந்து போய் நடித்தார் வடிவேலு.


அந்த படம் ப்ளாப் ஆனது ஒருபுறம் இருக்க, ஸ்ரோயாவின் வாழ்க்கை அத்தோடு தமிழ் சினிமாவில் அஸ்தமனம் ஆனது. காரணம் அந்த அளவிற்கு தமிழ் ஹீரோக்கள் கடுப்பானதுதான்.


ஆனாலும் அசராத வடிவேலு தனக்கு ஜோடியாக அழகிய ஹீரோயின்களை நடிக்க வைப்பதில் ஆர்வமாக இருக்கிறார். தெனாலிராமன் படத்தில் இப்படித்தான் மீனாட்சி தீக்ஷித் நடித்தார்.


சதா உடன் ஆட்டம்

சதா உடன் ஆட்டம்

இதோ இப்படி வடிவேலு நடிக்கும் எலி படத்தில் நடனமாடியுள்ளார் சதா. சில தினங்களுக்கு முன்னர் வடிவேலு, சதா நடித்த நடன காட்சியொன்றை இன்று சென்னை பின்னி மில்லில் படமாக்கினார்.


பிரம்மாண்ட செட்

பிரம்மாண்ட செட்

ஏராளமான துணை நடிகைகள் உடன் ஆட வடிவேலு, சதா ஜோடியாக ஆட இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது.பெரிய செட் போட்டு இதை எடுத்தனர். டான்ஸ் மாஸ்டர் தாரா நடனம் அமைத்தார்.


பெரிய நடிகர்களுடன்

பெரிய நடிகர்களுடன்

விக்ரம், மாதவன், விஷால், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி கதாநயாகர்களுடன் சதா நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். தற்போது அவருக்கு மார்க்கெட் இல்லாவிட்டாலும் வடிவேலுடன் அவர் நடிப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கதை முக்கியம் அமைச்சரே

கதை முக்கியம் அமைச்சரே

என்னதான் கண்ணுக்கு அழகா கதாநாயகி இருந்தாலும் கதையும், காமெடியும்தான் ஒரு படத்தை வெற்றி பெற வைக்கும் என்பதை வடிவேலு புரிந்து கொண்டால் சரிதான் என்கின்றனர் இந்த ஜோடியை பொறாமை பொங்க பார்ப்பவர்கள்.


English summary
Amazingly dancing Sadha with Vadivelu , Actress sadha having no new movie chances at tamil movie so she is dancing with comedy actor vadivelu in eli movie

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil