Don't Miss!
- News
சேகர் ரெட்டிக்கு ரூ. 7 கோடி? ஐ.டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய அதிமுக ‘மாஜி’.. ’அதே’ நாளில் விசாரணை!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
த்ரிஷ்யம் 2வை தூக்கி சாப்பிடுமா பிருத்விராஜின் Cold Case? ரிலீஸ் தேதியை வெளியிட்ட அமேசான் பிரைம்!
திருவனந்தபுரம்: அய்யப்பனும் கோசியும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள Cold Case திரைப்படம் ஒடிடி ரிலீசாக வெளியாகிறது.
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகி உள்ள அரை டஜன் படங்கள் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் உள்ளன.
விரைவில்
ரீ
என்ட்ரியாகும்
வடிவேலு..
இன்னும்
பல
சுவாரசிய
தகவல்கள்..
இன்றைய
டாப்
5
பீட்ஸில்!
இந்த ஆண்டு வெளியான த்ரிஷ்யம் படத்தை பிருத்விராஜின் இந்த கிரைம் த்ரில்லர் படம் மிஞ்சும் என்கிற எதிர்பார்ப்பு மலையாள சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அய்யப்பனும் கோசியும்
மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் நடிகரான பிருத்விராஜ் மறைந்த இயக்குநர் சாச்சி இயக்கத்தில் உருவான அய்யப்பனும் கோசியும் படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான அந்த திரைப்படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. பல்வேறு மொழிகளிலும் அந்த படம் ரீமேக் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பல படங்கள்
பிருத்விராஜ் நடிப்பில் குருதி, ஆடுஜீவிதம், ஸ்டார், ஜன கண மண, பிரம்மம், தீர்ப்பு உள்ளிட்ட பல படங்கள் இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்கும் தருவாயிலும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில் உள்ளன. மோகன் லால் இயக்கும் பரோஸ் படத்திலும் இவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கோல்ட் கேஸ்
பிருத்விராஜ் நடிப்பில் உருவான கோல்ட் கேஸ் திரைப்படம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து விட்ட நிலையில், விரைவில் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளதாக தற்போது ரிலீஸ் தேதியுடன் அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சத்யாஜித் எனும் போலீஸ் அதிகாரியாக பிருத்விராஜ் இதற்குமுன் நடித்திராத வகையில் நடித்துள்ளாராம்.

அதிதி பாலன்
அருவி படத்தில் நடித்து பிரபலமான அதிதி பாலன். கர்ணன் படத்தில் தனுஷுக்கு அக்காவாக நடித்த லக்ஷ்மிபிரியா சந்திரமெளலி, சுசித்ரா பிள்ளை, ஆத்மியா ராஜன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். கிரிஷ் கங்காதரன் உடன் இணைந்து ஜோமோன் டி ஜான் இந்த படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார்.

த்ரிஷ்யம் 2வை மிஞ்சுமா
இந்த ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் 2 படத்தை மிஞ்சும் அளவுக்கு சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்த படம் உருவாகி உள்ளது என்றும், கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் நடக்கும் கொலை குற்றத்தை வித்தியாசமான கோணத்தில் பிருத்விராஜ் விசாரித்து கண்டுபிடிப்பதே படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.
#ColdCase on June 30 PrimeVideoIN
— Abhishek Boby (Abhi02136863) June 17, 2021
💥
After a long time a much awaited PrithviOfficial movie❤️#ColdCaseOnPrime pic.twitter.com/cSxzTVPGdr
மிரட்டும் டீசர்
தற்போது வெளியாகி உள்ள Cold Case படத்தின் டீசர் பக்காவாக மிரட்டுகிறது. மலையாளத்தில் கிரைம் படங்கள் வந்தாலே வித்தியாசமாகவும் மிரட்டலாகவும் இருப்பது வழக்கம் தான். சமீபத்தில் வெளியான அஞ்சம் பாதிரா, ஃபாரன்சிக், த்ரிஷ்யம் 2, நய்யாட்டு பட வரிசையில் பிருத்விராஜின் இந்த படமும் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

எப்போ ரிலீஸ்
சில நாட்களுக்கு முன்பு தான் பெரிய தொகைக்கு பிருத்விராஜின் கோல்ட் கேஸ் படத்தை அமேசான் பிரைம் வாங்கி உள்ளது. இந்நிலையில், தற்போது வரும் ஜூன் 30ம் தேதி இந்த படம் வெளியாகும் என்கிற அசத்தல் அப்டேட்டையும் அமேசான் பிரைம் வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.