»   »  யாரைப் பார்த்து?: ஆம்பளடா, நிரூபிச்சிட்டேன்ல- மார்தட்டிய விஷால்

யாரைப் பார்த்து?: ஆம்பளடா, நிரூபிச்சிட்டேன்ல- மார்தட்டிய விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் ஆம்பள என்பதை நிரூபத்துவிட்டேன் என நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் முதலில் லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்தது. பின்னர் அனுமதி மறுக்கப்பட்டதால் சென்னை தி. நகரில் உள்ள நடிகர் சங்க மைதானத்திலேயே நடந்தது.

கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு துவங்கியது.

தள்ளுமுள்ளு

தள்ளுமுள்ளு

அழைப்பிதழ் இல்லாத யாரும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சங்க பொதுச் செயலாளர் விஷால் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் அழைப்பிதழ் இல்லாமல் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தடியடி

தடியடி

தள்ளுமுள்ளு மோதலில் முடிய போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மேலும் 20 பேரை கைது செய்தனர். இதற்கிடையே நடிகர் கருணாஸின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

விஷால்

விஷால்

கூட்டத்தில் பேசிய விஷால் கூறுகையில், சங்க உறுப்பினர்களின் நலன்களுக்காக தொடர்ந்து பாடுபடுகிறோம். யார் எத்தனை தடைகளை போட்டாலும் அதை எல்லாம் மீறி நல்லது செய்வோம். இந்த மைதானத்தில் கட்டிடம் கட்டாமல் விட மாட்டோம் என்றார்.

ஆம்பளயா?

ஆம்பளயா?

பொதுக்குழு கூட்டத்திற்கு வந்து மல்லுக்கட்டும் சிலர் என்னை பார்த்து நீ எல்லாம் ஒரு ஆம்பளயா என்றார்கள். நான் ஆம்பள என்பதை தற்போது நிரூபித்துவிட்டேன். எந்த மிரட்டலுக்கும் அஞ்சமாட்டேன் என்றார் விஷால்.

English summary
Actor Vishal said that he has proved that he is a man by conducting Nadigar Sangam's annual GB meet successfully.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil