’ஜி’க்கு அப்புறம் ‘ஜி’ கூட.. அஜித்துடன் அம்பானி சங்கர்.. 18 வருஷம் ஆகிடுச்சாம்!
சென்னை: நடிகர் அஜித்துடன் ஜி படத்தில் நடித்த அம்பானி சங்கர் அதன் பிறகு 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் அஜித்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் இயக்குநர் வினோத் உடன் இணைந்து அஜித் குமார் நடிக்கவுள்ள AK61 படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ள AK62 படத்தின் அப்டேட்டும் நேற்று வெளியாகும் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது.

தாடி லுக்கில் அஜித்
க்ளீன் ஷேவ் பண்ணா போலீஸ், பெரிய தாடி வைத்தால் வில்லன் என்கிற ஸ்ட்ராட்டஜியில் இயக்குநர் எச். வினோத் அடுத்த படத்தை உருவாக்க போகிறார் என்பது சமீபத்தில் வெளியான அஜித்தின் புதிய தோற்றத்தை பார்த்தாலே தெரிகிறது. நீண்ட வெள்ளை தாடியுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் மாஸாக இருக்கிறார் அஜித்.

அஜித்துடன் அம்பானி சங்கர்
ஏகே 62 அப்டேட் வரும் என எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏகே 61 படத்தின் அட்டகாச அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது. அஜித்துடன் நடிகர் அம்பானி சங்கர் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு 'ஜி'க்கு அப்புறம் 'ஜி' கூட என கமெண்ட் போட்டுள்ள நிலையில், ஏகே61 படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்கப் போகிறாரா என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

18 வருஷ சேலஞ்ச்
சமீபத்தில் 10 வருட சேலஞ்ச் என ஏகப்பட்ட பேர் தங்களின் போட்டோக்களை கம்பேர் செய்து போட்டிருந்தனர். இந்நிலையில், இது தனக்கு 18 வருஷ சேலஞ்ச் என அம்பானி சங்கர் போட்டுள்ளார். அஜித், த்ரிஷா நடித்த ஜி படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

அஜித்தின் ஜி
கடந்த 2005ம் ஆண்டு இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஜி. 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வெளியான இந்த படம் வந்து 17 ஆண்டுகள் ஆகின்றன. படத்தின் ஷூட்டிங் 2004ம் ஆண்டே முடிந்த நிலையில், அம்பானி சங்கர் அஜித்துடன் நடித்து 18 ஆண்டுகள் ஆகின்றன என பதிவிட்டு இருக்கிறார். வித்யாசாகர் இசையில் அந்த படத்தில் இடம்பெற்ற "டிங் டாங் கோயில் மணி" பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











