எலான் மஸ்க்கே இதை எதிர்பார்த்திருக்க மாட்டார்… முன்னாள் காதலி ஆம்பர் ஹெர்ட் கொடுத்த ஷாக்

வாஷிங்டன்: உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை சில தினங்களுக்கு முன்னர் எலான் மஸ்க் வாங்கினார்.

எலான் மஸ்க் கைகளில் டிவிட்டர் நிறுவனம் சென்றதில் இருந்து பல அதிரடியான மாற்றங்கள் நடந்ந்து வருகின்றன.

அதேநேரம், உலக அளவில் புகழ்பெற்ற பல பிரபலங்களும் டிவிட்டரில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்

டிவிட்டரை வாங்கிய எலான் மஸ்க்

உலகளவில் பலரும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளமான டிவிட்டரை 35 லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் வாங்கியுள்ளார். டிவிட்டரை வாங்கிய அதே வேகத்தில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெத் சீகல், மூத்த சட்ட ஆலோசகர் விஜயா கடே உள்ளிட்டோரை பணிநீக்கம் செய்த எலான் மஸ்க், அவரே தலைவராக பொறுப்பேற்றார். அதேபோல், 3,700 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூ டிக் சர்ச்சை

ப்ளூ டிக் சர்ச்சை

அதேநேரம், டிவிட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் ஐடிக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என அதிரடி காட்டியுள்ளார் எலான் மஸ்க். இது டிவிட்டர் பயனாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால், டோனி ப்ராக்ஸ்டன், நடிகை ஷோண்டா ரைம்ஸ், ஓய்வுபெற்ற தொழில்முறை மல்யுத்த வீரர் மிக் ஃபோலே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் டிவிட்டரில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த வரிசையில் எலான் மஸ்க்கின் முன்னாள் காதலியும் ஷாக்கிங் கொடுத்துள்ளார்.

ஆம்பர் ஹெர்டுடன் காதல்

ஆம்பர் ஹெர்டுடன் காதல்

ஹாலிவுட் பிரபலங்களான ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இருவரும் 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். அதன்பின்னர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்ட நிலையில், ஆம்பர் ஹெர்ட் எழுதிய கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியது. நீதிமன்றம் வரை சென்ற இந்த பஞ்சாயத்தில், ஜானி டெப்க்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என ஆம்பர் ஹெர்டுக்கு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனிடையே எலான் மஸ்க்கையும் காதலித்து வந்தார் ஆம்பர் ஹெர்ட். இந்த ஜோடி 2016 முதல் 2018 வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கில் கூட எலான் மஸ்க் சாட்சி சொல்ல வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

டிவிட்டர் அக்கவுண்ட் டெலிட்

டிவிட்டர் அக்கவுண்ட் டெலிட்

எலான் மஸ்க் - ஆம்பர் ஹெர்ட் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில், எலான் மஸ்க் டிவிட்டரை வாங்கியதும், தனது டிவிட்டர் அக்கவுண்டை டெலிட் செய்துள்ளார் ஆம்பர் ஹெர்ட். இது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. எலான் மஸ்குடன் ஏற்பட்ட காதல் தோல்வியின் விரக்தியில் ஆம்பர் ஹெர்ட் இப்படி டிவிட்டர் அக்கவுண்டை டெலிட் செய்துவிட்டாரா எனவும் நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர். ஆனால், இதுகுறித்து ஆம்பர் ஹெர்ட் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X