»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை அம்பிகாவுக்கு அதிமுகவில் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அதிமுக மகளிர் அணி அவைத்தலைவர் பதவி அவருக்கு தரப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடிகை ராதா மீது திருநெல்வேலி நீதிமன்றத்தில் நில மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.இதுதொடர்பாக அவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இந்த நிலையில் அவரும் அவருடைய அக்கா அம்பிகாவும் திடீரென்று அதிமுகவில் சேர்ந்தனர். அதன் பிறகுகடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை பொதுத் தேர்தலின்போது அதிமுகவுக்காக இவர்கள் தமிழகம்முழுவதும் சூறாவளி பிரசாரம் செய்தனர்.

அதற்கு பரிசாக அம்பிகாவுக்கு சென்னையில் இரண்டு ஒயின் ஷாப்கள் நடத்த உரிமம் அளிக்கப்பட்டதாக பேச்சுஎழுந்தது.

இந்த நிலையில் அம்பிகாவுக்கு கட்சிப் பதவியைக் கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

கேரள மாநில அதிமுக மகளிர் அணி அவைத் தலைவர் பதவியை அம்பிகாவுக்குக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.இதுதவிர கேரள அதிமுகவுக்கான மேலும் சில நிர்வாகிகளின் பெயர்களையும் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

கேரளத்தைச் சேர்ந்தவர் தான் அம்பிகா என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது தாயார் அம் மாநில காங்கிரஸ்கட்சியில் இருந்தவர்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil