»   »  ச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு! - இயக்குநர் அமீர்

ச்சே... என்னா அரசியல் இது... அவமானமா இருக்கு! - இயக்குநர் அமீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் தற்போதைய சூழல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது என இயக்குநர் அமீர் தெரிவித்தார்.

மதுரையில் இயக்குநர் அமீர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, "தமிழகத்தில் பதவிக்காக சண்டை நடந்து வரும் பெரும் அவமானமாக உள்ளது.

சசிகலாவுக்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது என்றால், அவர்கள் ஏன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்? அவர்களின் தொலைபேசிகளும் அணைத்து வைக்கப்படவேண்டிய அவசியம் என்ன?

Ameer criticised present political situation

மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலை உண்மையிலேயே பெரும் தலைகுனிவு. இச்செயலால் வாக்களித்த மக்களை இவர்கள் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவர்னரை சந்தித்தபோது, தன்னை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதாக ஏன் தெரிவிக்கவில்லை. தற்போதுள்ள அரசியல் சூழல் கடந்த 20 ஆண்டுகள் இல்லாதஅரசியல் சூழலை ஏற்படுத்தியுள்ளது," என்றார்.

English summary
Director Ameer has criticised the politicians for the present crisis in the state.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil