»   »  அமீர் படத்துக்கு எம்ஜிஆர் - ரஜினி தலைப்பு!

அமீர் படத்துக்கு எம்ஜிஆர் - ரஜினி தலைப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழைய திரைப்படங்களின் பெயர்களிலேயே புதிய திரைப்படங்கள் வந்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், எம்.ஜி.ஆர். என்ற ஒரு மாபெரும் அரசியல் தலைவரின் பெயரையும், பாண்டியன் - என்ற ரஜினிகாந்தின் திரைப்பட பெயரையும் இணைத்து, எம்ஜிஆர் பாண்டியன் என்று பெயர் சூட்டியுள்ளனர் ஒரு படத்துக்கு.

Ameer in 'MGR Pandian'

இந்தப் படத்தின் அமீர் நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தைத் தயாரித்து, இயக்கும் ஆதம்பாவா கூறுகையில். "அமைதிப் படைக்குப் பிறகு மீண்டும் ஒரு பென்ச் மார்க் அரசியல் படமாக இருக்கும் இந்தப் படம். எம்ஜிஆர் நூற்றாண்டை சிறப்பாகக் கொண்டாடிவரும் இவ்வேளையில் ஒரு உண்மையான எம்ஜிஆர் ரசிகனை இப்படத்தில் காணலாம். அமீரின் முழு ஒத்துழைப்பில் படம் சிறப்பாக வந்துள்ளது

ஆனந்தராஜ், பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மற்றும் மகாநதி சங்கர், ராஜ் கபூர், கசாலி, ராஜசிம்மன், சம்பத் ராம், பாவா லக்ஷ்மணன், வின்சென்ட் ராய், செவ்வாழை, சுஜாதா, ஜீவிதா, சரவண சக்தி ஆகியோர் நடிக்கிறார்கள் தேவராஜ் ஒளிப்பதிவு செய்ய வைரமுத்து ,பா.விஜய் பாடல்கள் எழுத வித்யாசாகர் இசையமைக்கிறார்

Ameer in 'MGR Pandian'

ஏற்கனவே நான்கு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அமீர் வட சென்னை மற்றும் சந்தனத்தேவன் படத்திலும் பிசியாக இருப்பதால் இரண்டிற்கும் இடையில் தேதிகள் பாதிக்காமல் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம்," என்றார்.

Ameer in 'MGR Pandian'

தேனி, மதுரை, பகுதிகளில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

English summary
Ameer's new movie has titled as MGR Pandian.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil