Ameer: 30 ஆண்டு பகை.. நீ நல்லவன்யா.. மாரி செல்வராஜை பாராட்டிய அமீர்!

சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ், அனுபமா, ரஜிஷா, பசுபதி என பலரும் நடித்துள்ள திரைப்படம். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17ம் தேதி இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தில் பாண்டிய ராஜன் கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து அமீர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அதில், தென் மாவட்டங்களில் இரண்டு சமூகத்திற்கு இடையே 30 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பகை இருந்து கொண்டே இருக்கிறது. இந்த பகையை யார் தொடங்கினார்கள் என்று தெரியாது, எந்த காரணத்திற்காக தொடங்கினார்கள் என்றும் தெரியாது. அந்தப் பகைக்கு ஒரு முற்றுப்புள்ளி வர வேண்டும். பைசன் படத்தின் நாயகன் துருவ் விக்ரம் ஒரு வசனத்தை பேசி இருப்பார், நான் பிறப்பதற்கு முன்பே, என்னுடைய தாத்தா பிறப்பதற்கு முன்பே இந்த பகை இருக்கிறது. எனக்கும் இந்த பகைக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தற்போது வரை அந்த பகை என் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து நான் எப்படி வெளியே வருவது என ஒரு கேள்வியை எழுப்பி இருப்பார்.

Bison Mari Selvaraj Ameer
Photo Credit:

அமீர் பேட்டி: இந்த கேள்வியை தான் இயக்குனர் மாரி செல்வராஜ் என்னிடம் கூறினார். தென் மாவட்டங்களில் இப்படி ஒரு பகை இருக்கிறது, அந்த பகையை தீர்ப்பதற்கு, நான் ஒரு படத்தை எடுக்கிறேன். என்னுடைய நோக்கம் அதுதான் பகையை தூண்டுவது இல்லை. பகையை தீர்க்க வேண்டும் என்பதுதான் அதற்கு உங்களின் உதவி வேண்டும், படத்தில் உங்களுடைய கதாபாத்திரம் இதுதான் என்று பெயரை சொல்லித்தான் கதையை என்னிடம் சொன்னார். இந்த கதாபாத்திரத்தில் இந்த கதாபாத்திரத்தை உங்கள தவிர வேறு யாருமே செய்ய மாட்டார்கள் என்றார். ஏனென்றால்,இந்த படத்தில் நடித்த பிறகு ஒரு சாதிய அடையாளம் விழுந்து விடும். ஆனால், நோக்கம் நல்ல நோக்கமாக இருந்ததால், மாரி செல்வராஜின் நோக்கத்தை பாராட்டி, கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். இரண்டு சமூகத்திற்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதில் என்னுடைய பங்கு இருக்கும் என்றால் நிச்சயமாக இந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன் என ஒத்துக் கொண்டே என்றார்.

துருவை 99லிருந்தே எனக்கு தெரியும், அவரின் அப்பாவும் நானும் மிக நெருங்கிய நண்பர்கள். அவருடைய உழைப்பு சேது படத்தில் என்ன என்று அருகில் இருந்து பார்த்தவன் நான். இப்போது பைசனில் சேதுவில் விக்ரமை எப்படி பார்த்தேனோ அது போல இருந்தார். விக்ரமுக்கு பிதாமகனில் கிடைத்தது துருவுக்கு இந்த படத்தில் நிச்சயம் பெயர் கிடைக்கும் என்று அமீர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X