»   »  தனுஷ் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல இயக்குனர்?

தனுஷ் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிக்கப் போகும் பிரபல இயக்குனர்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னை படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இயக்குனர் அமீர் நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

தனுஷை வைத்து வெற்றி மாறன் இயக்கி வரும் படம் வட சென்னை. தனுஷுக்கு ஜோடியாக அமலா பாலை ஒப்பந்தம் செய்தனர். டேட்ஸ் பிரச்சனையாக உள்ளது என்று கூறி அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார்.


தனுஷ் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது.


விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

வட சென்னை படத்தின் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டே போகிறது. இந்நிலையில் அமலாவை போன்றே டேட்ஸ் பிரச்சனையை சொல்லி விஜய் சேதுபதியும் படத்தில் இருந்து வெளியேறினார்.


பரபரப்பு

பரபரப்பு

அடுத்தடுத்து அமலா பால், விஜய் சேதுபதி ஆகியோர் வட சென்னை படத்தில் இருந்து வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது. படம் கைவிடப்படுகிறதோ என்ற சந்தேகம் கூட பலருக்கு எழுந்தது.


தனுஷ்

தனுஷ்

படம் கைவிடப்பட்டதாக நினைத்தபோது ஷூட்டிங்கை மீண்டும் துவங்கி நடத்தினார் வெற்றிமாறன். இந்நிலையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நடிக்குமாறு இயக்குனர் அமீரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.


அமீர்

அமீர்

வட சென்னை படத்தில் நடிக்க வெற்றி மாறன் என்னை அணுகியுள்ளார். நான் இன்னும் முடிவு செய்யவில்லை. இரண்டு நாட்களில் அவர்களிடம் என் முடிவை தெரிவிக்க உள்ளேன் என்கிறார் அமீர்.


English summary
Vetri Maaran has approached director Ameer to replace Vijay Sethupathi in his upcoming movie Vada Chennai starring Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil