twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமீரின் ஆதி பகவன் படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ்!

    By Mayura Akilan
    |

    சென்னை: இயக்குநர் அமீரின் அதிபகவன் படத்திற்கு 'ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

    திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'ஆதிபகவான்' படத்தை அமீர் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தில் ஜெயம்ரவி, நீத்து சந்திரா நடித்துள்ளனர்.

    2 ஆண்டுகளாக நீண்ட தயாரிப்பில் இருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிந்து எடிட்டிங், டப்பிங் பணிகள் நடந்து வந்தன. இஸ்லாமியரான அமீர் இயக்கத்தில் உருவாகும் 'ஆதிபகவான்' படத்தில் இந்து மதத்தை அசிங்கப் படுத்தி இருக்கிறார். எனவே அதை திரையிடுவதற்கு முன்பு எங்களுக்கு போட்டு காட்ட வேண்டும், அத்துடன் 'ஆதிபகவான்' என்பது எங்களின் முக்கிய தெய்வத்தை குறிக்கிற சொல். எனவே படப்பெயரை உடனே மாற்ற வேண்டும் எனறெல்லாம் எதிர்ப்பு கிளம்பியது.

    சென்சாரில் 'ஏ' சான்றிதழ்

    எதிர்ப்புகள் வந்த நிலையிலும் பட வேலைகள் முடிந்து சென்சாரில் ஓகே வாங்கியிருக்கிறார்கள். படத்தில் ஆபாச காட்சிகள் இல்லாமல் போனாலும் சண்டை காட்சிகளும், பதற வைக்கிற காட்சிகளும் இருக்கிறதாம். இதன் காரணமாகவே சென்சார் 'ஏ' சான்றிதழ் தந்திருக்கிறதாம்.

    படத்தை 22ம் தேதி ரிலீஸ் செய்த பிறகு மீண்டும் ஒரு சென்சார் செய்து சேட்டிலைட் உரிமையை விற்பனை செய்து விடலாம் என முடிவு செய்திருக்கிறார் இயக்குனர் அமீர்.

    இப்படத்தை சன் டிவி வாங்கியுள்ளதை ஏற்கனவே ஒரு செய்தியில் சொல்லியுள்ளோம்...

    English summary
    Director Ameer's 2 year in making film Aadhi Bhagavan finally went for censor board clearance, and has been certified with an A certificate. Jayam Ravi starrer Aadhi Bhagavan has awarded A for its action scenes. This action movie is about a gangster and so has thrilling fight scenes, namely, a gun fight and a street fight which were designed by foreign stunt directors.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X