»   »  ஃபேஸ்புக், ட்விட்டரில் எனக்கு அக்கவுன்டே இல்லை! - அமீரை அலற வைத்த ஒரு ட்விட்!!

ஃபேஸ்புக், ட்விட்டரில் எனக்கு அக்கவுன்டே இல்லை! - அமீரை அலற வைத்த ஒரு ட்விட்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று கிட்டத்தட்ட அலறிவிட்டார் இயக்குநர் அமீர். காரணம் அவர் பெயரில் வெளியான ஒரு ட்விட்.

அந்த ட்விட் விஜய்யின் தெறி படத்துக்கு எதிரானது. 'ரூ 7 கோடி கொடுத்து தெறி படத்தின் மதுரை ஏரியா வாங்கினேன். இப்போது அந்தப் படத்தால் நஷ்டம். விரைவில் போராட்டம் நடத்தப் போகிறேன்,' என்று இருந்தது அந்த ட்விட்டில்.

Ameer's denial for a tweet on Theri

இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த ட்விட்டர் பதிவிற்கு பதில் கடிதம் ஒன்றை அமீர் வெளியிட்டார். அதில் எனக்கும் இந்த ட்விட்டுக்கும் சம்பந்தமில்லை. நான் பேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ இயங்கவில்லை. யாரோ திட்டமிட்டு என் பெயரைப் பயன்படுத்தி இப்படிச் செய்திருக்கிறார்கள் என்று விளக்கம் அளித்ததோடு, தயாரிப்பாளர் தாணுவுக்கும் ஒரு தனி கடிதம் அனுப்பியிருந்தார்.

செய்தியாளர் சந்திப்பில் இதைக் காட்டிய தாணு, "இது சினிமாவைக் காப்பாத்தற புள்ளை. அதனாலதான் ஒரு தவறான செய்தியைப் பாத்ததும் பதறிட்டு இப்படி விளக்கம் தருது. ஆனா தியேட்டர்காரர்கள் சங்கத்தில் உள்ள சிலர் சினிமாவை அழிக்கப் பார்க்கிறார்கள்," என்றார்.

English summary
In a letter Director Ameer Sulthan says that he hasn't any account in twitter or facebook.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil