»   »  அமீர் இயக்கும் சந்தனத் தேவன்... ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை!

அமீர் இயக்கும் சந்தனத் தேவன்... ஒரு அட்டகாசமான ஜல்லிக்கட்டு கதை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி...' - அமீர் இயக்கும் சந்தனத் தேவன்!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், தனது அடுத்த படத்தை ஜல்லிக்கட்டை மையமாக வைத்து இயக்கப் போவதாக அறிவித்துள்ளார் இயக்குநர் அமீர்.


இந்தப் படத்துக்கு சந்தனத் தேவன் என்று தலைப்பிட்டுள்ளார்.


Ameer's Santhana Thevan based on Jallikkattu

இந்தப் படத்தில் இயக்குநர் அமீர், ஆர்யா, ஆர்யாவின் தம்பி சத்யா நாயகர்களாக நடிக்கிறார்கள்.


படத்தின் முதல் தோற்றப் போஸ்டரில் ஒரு ஜல்லிக்கட்டுக் காளையை ஆர்யாவும் சத்யாவும் அடக்குவது போன்ற படம் இடம்பெற்றுள்ளது.


மேலும் அதில், "அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி, மண்ணை நேசி, மனிதனாக இரு..." என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.


படத்தை அமீர் பிலிம் கார்ப்பொரேஷன் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

English summary
Director Ameer has announced his new movie titled Santhana Thevan based on Jallikkattu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil