»   »  ஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்!

ஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் பல அதிர்வுகளை ஏற்படுத்திய படம் பருத்தி வீரன். இந்த படத்தில் தான் கார்த்தி ஹீரோவாக அறிமுகமானார். ப்ரியாமணிக்கும் தேசிய விருது கிடைத்தது.

அமெரிக்காவில் படித்து முடித்து ஹேண்ட்சம் பாயாக இருந்த கார்த்தியை பருத்தி வீரனாகவே வாழ வைத்திருப்பார் அமீர். இந்த படம் ரிலீஸாகி நேற்றோடு சரியாக பத்தாண்டுகள் முடிந்தது. பருத்தி வீரனின் பத்தாண்டுகள் என்று ஹேஷ்டேக் வைத்து ட்விட்டரில் ட்ரெண்டாக்கினார்கள் வலைதளவாசிகள்.

Ameer starts his new project on the 10th year of Paruthiveeran

கார்த்தி தனது பத்தாண்டு சினிமா வாழ்க்கைக்காக அனைவருக்கும் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டார். சரி... படத்தின் இயக்குநர் அமீர் என்ன செய்துகொண்டிருந்தார் தெரியுமா? ஆர்யா, சத்யா, அதிதி நடிப்பில் தான் இயக்கும் சந்தனத்தேவன் படத்தின் படப்பிடிப்பை நேற்று தான் துவக்கினார். மதுரை அருகே வெள்ளரிக்காடு என்ற கிராமத்தில் படப்பிடிப்பைத் துவக்கிய அமீருக்கு மதியம் வரையிலும் பருத்தி வீரனின் பத்தாண்டுகள் நினைவுக்கு வரவில்லை.

படப்பிடிப்புத் தளத்துக்கு சென்றிருந்த ஒரு நிருபர் வாழ்த்து சொன்னபோது தான் நினைவுக்கு வந்து ஆச்சர்யமாகி இருக்கிறார். ஒரு ஸ்பெஷல் நாளில் படப்பிடிப்பு தொடங்கியதில் படக்குழுவும் மகிழ்ச்சியடைந்திருக்கிறது. ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தில் இதுவரை பார்க்காத கெட்டப்களில் நடிக்கிறார்கள் ஆர்யா, சத்யா மற்றும் அமீர் மூவரும்.

English summary
Yesterday was a special day for director Ameer as his Paruthiveeran crossed 10 years, coincidentally he started his new project Santhanadevan on the same day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil