»   »  அடுத்தடுத்து 3 படங்கள்..சிம்பு, ஆர்யா மற்றும் ராணாவுடன் கைகோர்க்கும் அமீர்

அடுத்தடுத்து 3 படங்கள்..சிம்பு, ஆர்யா மற்றும் ராணாவுடன் கைகோர்க்கும் அமீர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் அமீர் அடுத்த வருடம் சிம்பு, ராணா மற்றும் ஆர்யா ஆகியோரை வைத்து வரிசையாக தனது அடுத்தடுத்த படங்களை தொடங்கவிருப்பதாக கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் குறிப்பிடத் தகுந்தவர் அமீர். மவுனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர் பாலாவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர்.


கடந்த 2 வருடங்களாக எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்த அமீர் தற்போது 3 படங்களை வரிசையாக இயக்கவிருக்கிறார்.


அமீர்

அமீர்

பாலாவிடம் இணை இயக்குனராகப் பணியாற்றிய அமீர், சூர்யா - த்ரிஷா நடிப்பில் வெளியான மவுனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான ராம், பருத்திவீரன் போன்ற படங்கள் ஹிட் படங்களாக மாறியதுடன் அதில் நடித்த ஜீவா மற்றும் கார்த்திக்கு ஒரு நல்ல பிரேக்கையும் கொடுத்தது.


ஆதி பகவான்

ஆதி பகவான்

2013 ல் ஜெயம் ரவியை வைத்து அமீர் இயக்கிய ஆதி பகவான் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக எடுபடவில்லை. அதன்பிறகு சுமார் 2 வருடங்கள் அமீர் எந்த ஒரு படத்தையும் இயக்கவில்லை.


ஒரே நேரத்தில்

ஒரே நேரத்தில்

இந்நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 3 படங்களை எடுக்கப் போவதாக அமீர் அறிவித்திருக்கிறார். கடந்த 2 வருடங்களாக 3 கதைகளை தயார் செய்ததாகவும் அவற்றில் சிம்பு, ராணா மற்றும் ஆர்யா ஆகியோரை நடிக்க வைக்கப் போவதாகவும் கூறுகிறார்.
சிம்பு, ராணா மற்றும் ஆர்யா

சிம்பு, ராணா மற்றும் ஆர்யா

சிம்புவை வைத்து எடுக்கப் போகும் படத்தை ஜனவரி மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடங்கப் போகிறாராம். தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் ராணா டகுபதியை வைத்து தொடங்கப் போகும் படத்திற்காக அமீர், ராணாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். சிம்பு, ராணாவைத் தொடர்ந்து தொடர்ந்து தான் இயக்கப் போகும் 3 வது படத்தில் ஆர்யாவை நாயகனாக்குகிறார் அமீர்.
கிராமம் மற்றும் நகரம்

கிராமம் மற்றும் நகரம்

பருத்திவீரன் மாதிரி கிராமத்துப் பின்னணியில் ஒரு கதையும், மவுனம் பேசியதே போல காதலை மையமாக வைத்து ஒரு கதையையும், முழுக்க நகரத்தை மைப்யபடுத்தி ஒரு கதையையும் அமீர் தயாராக வைத்திருக்கிறார். இதில் எந்தக் கதையில் யாரை நாயகனாக நடிக்க வைக்கப் போகிறார் என்பது மட்டும் தற்போது ரகசியமாக உள்ளது. விரைவில் இப்படங்கள் மற்றும் நாயகன்,நாயகியைப் பற்றிய முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
English summary
After a Long Gap Director Ameer Now Team Up with Simbu, Rana Daggubati and Arya. His First Movie with Simbu Normal Shoot Starts on January 2016.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil