»   »  வந்துட்டாய்யா வந்துட்டாய்யா: விஜய் ஹீரோயினை பார்த்து தெறித்து ஓடும் பிரபலங்கள்

வந்துட்டாய்யா வந்துட்டாய்யா: விஜய் ஹீரோயினை பார்த்து தெறித்து ஓடும் பிரபலங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சுத்தமாக மார்க்கெட் இல்லாத பாலிவுட் நடிகை அமீஷா பட்டேல் பிரபலங்களுடன் செல்ஃபி எடுத்து அதை சமூக வலைதளங்களில் போடவே பார்ட்டிகளுக்கு செல்கிறாராம்.

ரித்திக் ரோஷனின் கஹோனா ப்யார் ஹை சூப்பர் டூப்பர் ஹிட் படம் மூலம் நடிகையானவர் அமீஷா பட்டேல். பாலிவுட்டின் முன்னணி நடிகையாக ஆன அவருக்கு பின்னர் மார்க்கெட் இல்லாமல் போய்விட்டது.

தமிழில் புதிய கீதை படத்தில் விஜய்யை ஒன் சயிடாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் அமீஷா.

பார்ட்டிகள்

பாலிவுட்காரர்கள் அவ்வப்போது பார்ட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்த பார்ட்டிகளுக்கு எல்லாம் அழகாக உடைந்து அணிந்து ஆஜராகிவிடுகிறாராம் அமீஷா.

செல்ஃபி

பார்ட்டிகளுக்கு வரும் பாலிவுட் நடிகை, நடிகர்களுடன் வம்படியாக செல்ஃபி, புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகிறாராம் அமீஷா. இதனால் பார்ட்டிகளில் அமீஷாவை பார்த்தால் பிரபலங்கள் கடுப்பாகி தெறித்து ஓடுகிறார்களாம்.

ரங்கூன்

ஷாஹித் கபூர், சயிப் அலி கான், கங்கனா ரனாவத் நடித்துள்ள ரங்கூன் படம் பாலிவுட் பிரபலங்களுக்காக சிறப்பாக திரையிடப்பட்டது. அங்கு வந்த அமீஷா படத்தை பார்ப்பதை விட பிரபலங்களுடன் செல்ஃபி எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளார்.

ரன்பிர் கபூர்

நடிகை கரீனா கபூரின் தந்தை ரந்திர் கபூரின் 70வது பிறந்தநாள் பார்ட்டிக்கு அமீஷா வந்துள்ளார். அங்கு நடிகர் ரன்பிர் கபூருடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க 15 நிமிடங்கள் காத்திருந்திருக்கிறார்.

English summary
Bollywood celebrities are reportedly irritated with actress Amessha Patel as she is crazy about taking selfies and pictures with them at parties.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil