சின்ன மைனஸ் இல்லை.. பெரிய மைனஸ்.. அன்பான குடும்பம் சொன்ன அட்வைஸையாவது அமீர் கேட்பாரா?

சென்னை: அம்மாவை இழந்து நின்று இருந்த அமீரை பல தடைகளை தாண்டி ஆதரித்த குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள்ளும் அமீரை காண வந்தது ரசிகர்களை கண்ணீர் குளத்தில் ஆழ்த்தியது.

நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போது பெற்றால் தான் பிள்ளையா எனும் அறக்கட்டளை சார்பாக எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட பிள்ளைகளை எடுத்து வளர்த்து வருவது குறித்து கமல் பேசினார்.

அதே வார்த்தை அமீரை அரவணைத்து காத்து வரும் அஷ்ரப் மற்றும் ஷைஜி குடும்பத்தினருக்கு பொருந்தும் என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அமீரின் ஏக்கம்

அமீரின் ஏக்கம்

அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, குழந்தைகள் என ஒவ்வொரு போட்டியாளர்களையும் காண பிக் பாஸ் வீட்டுக்கு குடும்பங்கள் இந்த வாரம் வந்து சென்ற நிலையில், நம்மை காண யார் வருவார் என்கிற ஏக்கத்துடன் நடன இயக்குநர் அமீர் சில நாட்களாக சோகத்தில் இருந்தார். கடைசியில் வெள்ளிக்கிழமை எபிசோடில் அவரது ஏக்கம் தீர்ந்தது.

அமீரை பார்க்க

அமீரை பார்க்க

நம்மை பார்க்க யாருமே வரலையே என்றும் அமீர் உறவினர்கள் உள்ளே வந்த புரமோவையும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போடாமலே வைத்திருந்த நிலையில், அமீரை பார்க்க யாருமே வரவில்லையோ என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், அமீரை காண உண்மையான அன்பு கொண்ட உள்ளங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நடனமாடிக் கொண்டே வந்தனர்.

அலெனா ஐஷு சைஜு

அலெனா ஐஷு சைஜு

தன்னை பார்க்க ஒருத்தராவது வருவார்களா? என அமீர் ஏங்கி கொண்டிருந்த நிலையில், அலெனா, ஐஷு மற்றும் சைஜு என மொத்தம் மூன்று பேர் ஆடலும் பாடலுமாக டான்ஸ் மாஸ்டர் அமீரை காண பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து அவரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தினர்.

பெரிய மைனஸ்

பெரிய மைனஸ்

நல்லா கேம் ஆடுற அமீர் அதையே தொடர்ந்து செய்தால் நிச்சயம் இந்த விளையாட்டில் வின் பண்ணலாம். ஆனால், ஒரே ஒரு சின்ன மைனஸ் மட்டும் தான். அது மட்டும் வெளியே தப்பா தெரியுது. அதை கொஞ்சம் பார்த்து நடந்து கொண்டால் நல்லது என அமீரிடம் ஷைஜி அட்வைஸ் பண்ண அலெனா அது சின்ன மைனஸ் இல்லை பெரிய மைனஸ் என சொன்னது அமீருக்கு நன்றாக புரிந்திருக்கும் என தெரிகிறது. எடிட்டர் அதே நேரத்தில் பாவனியையும் காட்ட தவறவில்லை.

வாத்தி கம்மிங் டான்ஸ்

வாத்தி கம்மிங் டான்ஸ்

காலில் அடிபட்டு இருக்கும் அமீர் நடனமாட முடியாத நிலையில், வாத்தி கம்மிங் பாடலுக்கு அமீரின் மாணவிகள் நடனமாடியது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதிலும் அந்த குட்டிப் பொண்ணு என்னம்மா டான்ஸ் ஆடுகிறார்.

குறைவான நேரம்

குறைவான நேரம்

அமீரின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டில் வந்து பேசிய கொஞ்ச நேரத்திலேயே அவர்களுக்கான நேரம் முடிந்து விட்டதாக சொல்லி பிக் பாஸ் வெளியே அனுப்பியது ரசிகர்களை அதிருப்தியடைய செய்தது. அதன் பிறகு விளம்பர டாஸ்க்கை நீண்ட நேரம் போட்டு மேலும், கடுப்பை கிளப்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X