யாருக்கு ஹார்ட்...யாருக்கு கத்தி...அனைவரையும் வியக்க வைத்த சரத்குமாரின் டாஸ்க்

சென்னை : பிக்பாஸ் வீட்டிற்கு பணப்பெட்டியை கொடுப்பதற்காக வந்த சரத்குமார், போட்டியாளர்களுடன் கலகலப்பாக பேசினார். அவர் நடித்த பரம்பரா வெப் சீரிஸ் டிரைலரையும் அனைவருக்கும் அவர் போட்டுக் காட்டினார்.

பிறகு போட்டியாளர்களுக்கு பல டாஸ்க்குகளை கொடுத்தார் சரத்குமார். உடல் வலிமையை சோதிக்கும் வகையில் இருந்த டாஸ்க்குகள் அனைவரும் ரசிக்கும் படி இருந்தது. போட்டியாளர்களை கலாய்த்த சரத்குமார், இருவர் இருவராக கூப்பிட்டு டாஸ்க் கொடுத்தார்.

பாவனிக்கு டாஸ்க் கிடையாதா

பாவனிக்கு டாஸ்க் கிடையாதா

முதல் உடல் வலிமையை சோதிக்கும் வகையில் ஆண் போட்டியாளர்களை Push-up போட வைத்தார். பெண் போட்டியாளர்களில் தாமரை மற்றும் பிரியங்காவிற்கு Arm wrestling டாஸ்க் கொடுத்தார். இதில் தாமரை வெற்றி பெற்றார். அதே சமயம் பாவனிக்கு மட்டும் சரத்குமார் எந்த டாஸ்க்கும் கொடுக்கவில்லை.

திருமணத்திற்கு முயற்சிக்கும் அமீர்

திருமணத்திற்கு முயற்சிக்கும் அமீர்

பிறகு ஹார்ட் மற்றும் கத்தி வழங்கும் டாஸ்க் கொடுத்தார். இதில் அதிகமான அன்பு வைத்திருப்பவர்களுக்கு ஹார்ட்டையும், யார் மீது மனவருத்தம், நெருடல் இருக்கிறதோ அவர்களுக்கு கத்தியை கொடுக்க வேண்டும் என்றார். இதில் முதல் ஆளாக அமீரை கூப்பிட்ட சரத்குமார், உங்களுக்கு திருமணம் ஆகி விட்டதா என கேட்டார். அதற்கு அமீர், இப்போது தான் முயற்சி செய்து கொண்டிருப்பதாக கூறினார். கேமிராக்கள் உடனடியாக பாவனி பக்கம் திரும்பின.

பாவனியை ஏமாற்றிய அமீர்

பாவனியை ஏமாற்றிய அமீர்

இதை ஒருவருக்கு ஸ்பெஷலாக கொடுக்க வேண்டும் என தோன்றுகிறது. இதுவரை அவரிடம் நான் சொன்னதும் இல்லை. அப்படி நடந்து கொண்டதும் இல்லை என அமீர் பேச துவங்கியதால் ஹார்ட்டை பாவனிக்கு தான் கொடுக்க போகிறார் என பாவனி உட்பட அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத, வியக்க வைக்கும் விதமாக சிபியிடம் ஹார்ட் கொடுத்த அமீர், கத்தியை நிரூப்பிடம் கொடுத்தார்.

இரண்டுமே பிரியங்கா தான்

இரண்டுமே பிரியங்கா தான்

அடுத்து வந்த நிரூப், ஹார்ட் மற்றும் கத்தி இரண்டையும் பிரியங்காவிடம் கொடுத்தார். சிபி, ஹார்ட்டை ராஜுவிடமும், நல்லது கெட்டதற்கு தனக்கே காரணம் என கூறி கத்தியை தன்னிடமே வைத்துக் கொண்டார். தாமரை, ஹார்ட்டை பிரியங்காவிற்கும், கத்தியை அமீருக்கும் கொடுத்தார்.

பாவனியின் ஹார்ட் யாருக்கு

பாவனியின் ஹார்ட் யாருக்கு

அமீர் தனது ஹார்ட்டை சிபிக்கு கொடுத்தார். இதனால் பாவனி தனது ஹார்ட்டை யாரிடம் கொடுக்க போகிறார் என்ற ஆர்வம் அதிகரித்தது. அவரும் ஹார்ட்டை அமீருக்கு கொடுக்காமல் பிரியங்காவிற்கு கொடுத்தார். கத்தியை ராஜுவிற்கு கொடுத்தார்.

கடைசியில் மாற்றிய பிரியங்கா

கடைசியில் மாற்றிய பிரியங்கா

பிரியங்கா தனது ஹார்ட்டை தாமரைக்கு கொடுப்பதை போல் பேசி, கடைசியாக பாவனியிடம் கொடுத்தார். அதே போல் கத்தியை அனைவரும் எதிர்பார்த்தபடி நிரூப்பிடம் கொடுத்தார். நிரூப்பும், பிரியங்கா பேசிக் கொண்டிருக்கும் போதே கையை ஏந்தி காத்திருந்தார்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 5th January 2022 - Promo 1 | 3 லட்சம் இப்போ 7 லட்சமா, யார் பணப்பெட்டி எடுப்பாங்க?
பாவனி மீது என்ன கோபம்

பாவனி மீது என்ன கோபம்

அனைவரும் முதலில் ஹார்ட்டை கொடுத்து விட்டு பிறகு தான் கத்தியை கொடுத்தார்கள். ஆனால் ராஜு மட்டும் எழுந்ததுமே கத்தியை பாவனியிடமும், ஹார்ட்டை அமீரிடமும் கொடுத்தார். இதை பார்த்த ரசிகர்கள் ராஜுவிற்கு பாவனி மீது அப்படி என்ன கோபம், மின்னல் வேகத்தில் சென்று கத்தியை கொடுக்கிறாரே என கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X