கமல் சாரை பார்த்ததும் மாறிடுறியே...பிரியங்காவை கலாய்க்கும் அமீர்
சென்னை : பிக்பாஸின் இந்த சீசனில் ஒரு நாள் கடுமையான சண்டை நடந்தால், அடுத்த இரண்டு நாட்கள் கொஞ்சம் காமெடியான, கலகலப்பான விஷயங்கள் பற்றி மற்ற போட்டியாளர் யாராவது நடந்து கொள்வது போன்ற காட்சிகள் நடைபெறும்.
அந்த வகையில் ஃபினாலே டிக்கெட் சுற்றின் முட்டை டாஸ்க்கில் பிரியங்கா- தாமரை, ராஜு -பாவனி இடையே மிக கடுமையான சண்டை நடப்பதாக காட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து அடுத்த நாள் முட்டை எறியும் டாஸ்க் கொஞ்சம் கலகலப்பாக இருப்பது போல் இருந்தது.

மாறிடுறியே அக்கா
இதே போல் நேற்றைய எபிசோடில் பிரியங்கா மற்றும் அமீர் பேசிக் கொண்டிருக்கும் போது, எங்க அக்கா அப்படியே மாறும் பாரு பிரின்சிபல பார்த்து நடுங்குற மாதிரி என கமல் வரும் நாட்களில் பிரியங்காவின் செயல்பாடுகளை சொல்லி அவரை கலாய்க்கிறார். அவரும் பயந்து நடுங்குவதை போல் ரியாக்ஷன் காட்டுகிறார்.

பிரியங்காவை கலாய்க்கும் அமீர்
கமல் கேள்வி கேட்கும் போது பிரியங்கா எப்படி ரியாக்ட் பண்ணுவார் என அமீர் நடித்து காட்டுனார். அப்போது, அவர் பிரியங்கா என்றதுமே...சார் என்று உன் தோள்கள் இரண்டும் மேலே ஏறி விடும். கையை ஆட்டி ஆட்டி பேசுவாய். அதை பார்க்கும் போது, இது வாரம் முழுவதும் நல்லா தான நம்ம கிட்ட பேசிகிட்டு இருந்தது. இப்போ மட்டும் ஏன் இப்படி ரியாக்ட் பண்ணுது என தோன்றும் என்கிறார்.

நான் ஒன்னுமே பண்ணல சார்
அவர் கேட்கும் போது கொஞ்சம் பிரியங்காமல், நம்மளை கேட்டால் என்ன விளக்கம் சொல்வது என யோசித்து தலையை எல்லா பக்கமும் ஆட்டிக் கொண்டிருக்கும் போது, அவர் கரெக்ட்டாக கவனித்து பிரியங்கா...Stand up on the bench என்பது போல் கூப்பிடுவார். சார் நான் எதுவுமே பண்ணல சார் என்பது போல் தான் எழுந்து நிற்பேன் என்கிறார்.

பிரியங்கா போல் நடித்த அமீர்
கமல், பிரியங்காவை எவ்வாறு கூப்பிடுவார் என சொல்லி காட்டி, பிரியங்காவை கலாய்த்தார் அமீர். இந்த வாரமாவது நம்மை கூப்பிடாமல் இருக்க மாட்டாரா என நினைத்துக் கொண்டிருக்கையில் பிரியங்கா என கூப்பிட்டு விடுவார் என்கிறார் பிரியங்கா. எப்போது இப்படி யாராவது தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால், மற்ற போட்டியாளர்கள் நடந்து கொள்வது, டாஸ்கில் அவர்கள் செய்த தவறு பற்றி தான் பேசிக் கொள்வார்கள். ராஜு தான் வழக்கமாக யாரையாவது பேசி கலாய்ப்பார்.
Recommended Video

உங்களுக்கு இருக்கு
ஆனால் அமீர், கமலையே கலாய்த்து பேசி உள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள், இவர்களின் க்ரைம் ரேட் ஏறிக் கொண்டே போகும் போலவே. ஏற்கனவே டாஸ்கின் போது நடந்த சண்டை, அடிதடி, குரூப்பாக சேர்ந்து விளயைாடியது பற்றி கமல் என்னவெல்லாம் நன்றாக கேட்க போகிறார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில், இவர்களை கமலையே கலாய்த்து பேசிக் கொண்டிருப்பது ரசிக்கும் படியாகவும், உங்களுக்கு இருக்கு என சொல்ல வைப்பதை போலவும் உள்ளது.


Click it and Unblock the Notifications











