அமீரும் வெளியே வந்துட்டார்...அடுத்தடுத்து உடைபடும் சஸ்பென்ஸ்...கடுப்பாகும் ரசிகர்கள்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஆரம்பம் முதல் கடைசி வரை சஸ்பென்ஸ் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பதை போல், எதிர்பாராத பல விஷயங்கள் நடக்கும்.

Recommended Video

அமீரும் வெளியே வந்துட்டார்...அடுத்தடுத்து உடைபடும் சஸ்பென்ஸ்...கடுப்பாகும் ரசிகர்கள்

ஆனால் இந்த சீசனில் ஆரம்பம் முதலே சுவாரஸ்யம் குறைவாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வந்தனர். டாஸ்க்குகளும் பெரிய அளவில் சவாலாக இல்லாததால் அவைகளும் ரசிக்கும்படி இல்லை.

பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை

பிரச்சனைகளை கண்டுகொள்ளவேயில்லை

போட்டியாளர்கள் இடையே எப்போதும் சண்டை, பல தவறுகளை பிக்பாசும், கமலும் பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தது, இந்த வாரம் வெளியேற்றப்படுவார் என மக்கள் அதிருப்தி அடைந்த போட்டியாளர் முதல் ஆளாக சேவ் செய்யப்பட்டது என பலவும் ரசிகர்களை கடுப்பேற்றுவதாக இருந்தது.

உடைப்பட்ட ரகசியங்கள்

உடைப்பட்ட ரகசியங்கள்

இதற்கிடையில் ஒவ்வொரு வாரமும் வெளியேற போகிறவர் யார் என்பதும் முன்கூட்டியே சோஷியல் மீடியாவில் பரவி விடுகிறது. இதனால் அந்த சஸ்பென்சும் இல்லாமல் இருந்தது. சண்டை கூட அவர்கள் சொல்லி தான் போடுவோம் என தாமரை அவரது கணவரிடம் சொல்லியது, மக்கள் ஓட்டளித்து வெளியேற்றிய அபிஷேக் ராஜா கன்டென்டிற்காக மீண்டும் வைல்ட் கார்டு என்ட்ரியாக அழைத்து வரப்பட்டது என்பது போன்ற விஷயங்களால் இந்த முறை பிக்பாஸ் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையே குறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

டைட்டில் வின்னர் ராஜு

டைட்டில் வின்னர் ராஜு

நிகழ்ச்சியில் தான் இப்படி, ஃபைனல்ஸ் ஆவது கடைசி வரை சஸ்பென்ஸ் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் புஷ்ஷ்...என ஆக்கப்பட்டுள்ளது. ராஜு தான் டைட்டில் வின்னர் என நெட்டிசன்கள் ஒரு கெஸ்சில் தான் கூறி வந்தனர். ஆனால் அது உண்மை என்பது போல் வின்னர் டிராபியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்ட ராஜுவின் போட்டோ வெளியானது.

வெளியே வந்து விட்டார்

வெளியே வந்து விட்டார்

ராஜு தான் டைட்டில் வின்னர், பிரியங்கா தான் ரன்னர் அப் என்ற தகவலும் வெளியாகி விட்டது. என்றாலும் மூன்றாவது இடம் யாருக்கு என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இதற்கும் பதில் சொல்வதாக அமீர் மற்றும் நிரூப் வெளியேறி விட்டார்கள். பாவனிக்கு மூன்றாவது இடம் என்றும் சொல்லி விட்டார்கள். ஏற்கனவே நிரூப், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்து ராஜுவின் அம்மா, தாமரை, ஐக்கியுடன் இருக்கும் போட்டோ வந்து விட்டது.

குடும்பத்துடன் சந்திப்பு

குடும்பத்துடன் சந்திப்பு

இந்நிலையில் அமீர், கேரவனில் தனது குடும்பத்தாரை சந்திக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது பிக்பாஸ் ஃபினாலே ஷுட்டிங் முடிந்த பிறகு எடுக்கப்பட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. அமீருடன் எடுத்துக் கொண்ட போட்டோ, கேரவனிற்குள் அமீர் வருவது, மீண்டும் வெளியே சென்று ஒருவரை அழைத்து வந்து தனது குடும்பத்தாருடன் பேசுவதாக உள்ள வீடியோ வெளியாகி உள்ளது.

இதுவும் புஷ் தானா

இதுவும் புஷ் தானா

இதனை அமீரின் உறவினரான ஷாஜி இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அமீர், ராஜுவை தான் கேரவனிற்குள் அழைத்து வருகிறார் என்றும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். பிக்பாஸ் ஃபினாலே ஷுட்டிங் வரை அனைத்தும் தெரிந்து விட்டதே. ஒன்றை கூட சஸ்பென்சாக வைக்க மாட்டார்களா என ரசிகர்கள் கடுப்பாகி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X