பாவனியிடம் ஓப்பனாக லவ் சொன்ன அமீர்.. சிரித்துக் கொண்டே நோ சொல்லும் பாவனி.. என்னடா நடக்குது இங்க?

சென்னை: பாவனியின் அழகில் மயங்கி தொடர்ந்து அவரை பிளர்ட் பண்ணி வருகிறார் நடன இயக்குநர் அமீர்.

அமீர் உடன் தனக்கு நல்ல மாதிரியான ஃபீலிங் இருந்ததால் அடித்து பேசுகிறேன் என சொன்ன பாவனிக்கு மோசம் செய்யும் விதமாக பாவனியை லவ் பண்ணுகிறேன் என அமீர் ஓப்பனாகவே சொல்லி விட்டார்.

ஆனால், பாவனி அதனை சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து சிரித்துக் கொண்டே வருவது என்ன லாஜிக் என்றே தெரியவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மயக்கும் பாவனி

மயக்கும் பாவனி

இந்த சீசனில் பிக் பாஸ் ரசிகர்களை மட்டுமின்றி பிக் பாஸ் வீட்டுக்குள் இருக்கும் ஒரு சிலரையும் மயக்கும் ஒரே நபராக பாவனி இருந்து வருகிறார். பாவனியின் அழகில் மயங்கி ஆர்மி ஆரம்பித்தவர்கள் எல்லாம் இப்போ சைலன்ட்டாக பாவனி ஆர்மியில் இருந்து எஸ்கேப் ஆகி வருகின்றனர்.

அபிநய்க்கு ஆப்பு

அபிநய்க்கு ஆப்பு

அபிநய் தன்னை தப்பாக பார்க்கிறார் தப்பாக நடந்து கொள்கிறார். பிடிக்கவில்லை என்று சொல்லியும் பின்னாலே பூனை போல சுற்றி வந்து பேசுகிறார் என பொங்கிய பாவனி இப்போ அமீர் வெளிப்படையாகவே பாவனியை ஃபிளர்ட் பண்ணுவது தெரிந்தும் ஏன் அதை கண்டிக்காமல் இருக்கிறார் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுகிறது.

பாவனிக்கும் ஆசை

பாவனிக்கும் ஆசை

அமீரின் அப்ரோச் பிடித்து போய் பாவனிக்கும் அமீர் மீது காதல் வந்து விட்டது என்றும் அதனால் தான் அமீரை காப்பாற்ற அந்த டாஸ்க்கில் அமீர் போட்டோவை பாவனி காண்பித்தார் என்றும் இதே அமீருக்கு பதில் அபிநய் அங்கே அமர்ந்திருந்தால் பாவனி நிச்சயம் அபிநய்க்கு பாவம் பார்த்திருக்க மாட்டார் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

லவ் சொன்ன அமீர்

லவ் சொன்ன அமீர்

தில்லு இருந்தா தம் இருந்தா ஓப்பனா சொல்லுடா பார்ப்போம் என பாவனி அமீர் வாயால் காதலை சொல்லி கேட்க ஆசைப்பட்ட நிலையில், அமீரும் ஓப்பனாகவே பாவனியிடம் தனது காதலை சொல்லி விட்டார். அதை பிரியங்காவிடமும் கன்ஃபார்ம் பண்ணி விட்டார் அமீர்.

சிரித்துக் கொண்டே நோ

சிரித்துக் கொண்டே நோ

ஒரே ஒரு முறை முறைத்து விட்டு பாவனி அமீருக்கு நோ சொல்லி இருந்தால் கூட பாவனி ஆர்மியினர் சந்தோஷம் அடைந்து இருப்பார்கள். ஆனால், சிரித்துக் கொண்டே அமீருக்கு வாய் வார்த்தைக்காக நோ சொல்வது போல பாவனி சொல்கிறார் என அமீரே கலாய்க்கும் படி பாவனி நடந்து கொண்டது ரசிகர்களை பெரிதும் ஏமாற்றியது.

கமல் கடுப்பாவாரா

கமல் கடுப்பாவாரா

இந்த வாரம் பாவனி மற்றும் அமீருக்கு இடையே ஓடும் காதல் டிராக்கை பார்த்து கமல் சாரே கடுப்பாகி விடுவார் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். இந்த வாரம் உங்கள் வாழ்க்கை உங்கள் உரிமை லவ் பண்ணாலும் சரி, பண்ணலனாலும் சரி என கமல் வாழ்த்தி விட்டு தான் போவார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X