பிக்பாசிடம் கதறி அழுத அமீர்... ஏன் என்னாச்சு ? அப்படி என்ன நடந்தது ?
சென்னை : பிக்பாஸில் கடந்த வாரம் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க் நடத்தப்பட்டது. இதனால் பல சண்டைகள், வாக்குவாதங்கள் நடைபெற்றன. ஆனால் இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அடிக்கடி அன்பை பொழிந்து வருகிறார்கள்.
பொதுவாக பிக்பாஸ் வீட்டில் சண்டை, அழுகை என்பதெல்லாம் சாதாரணமாக நடப்பது தான். ஆனால் தன்னை ஸ்டிராங் என சொல்லிக் கொள்பவர்களையும் பிக்பாஸின் சில உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் கண்ணீர் சிந்த வைக்கும் காட்சிகள் பார்ப்பவர்களையும் கவர்ந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்ச்சி தான் நேற்றைய எபிசோடில் நடந்துள்ளது.

கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்த பிக்பாஸ்
நேற்று ரூ.3 லட்சம் பணப் பெட்டியுடன் வந்து அடுத்த டாஸ்க்கை துவக்கி வைத்துள்ளார் சரத்குமார். இதனால் நிரூப், பாவனி போன்றவர்களின் மனதில் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விடலாமா என எண்ணம் வர துவங்கி உள்ளது. இதனை அவர்களே நேற்று வெளிப்படுத்தினார்கள். இதற்கிடையில் ஒவ்வொரு போட்டியாளர்களாக கன்ஃபஷன் ரூமிற்கு அழைத்து, பிக்பாஸ் வீட்டில் அவர்களின் பயணம் பற்றி பேசினார் பிக்பாஸ்.

பிக்பாஸ் கொடுத்த அட்வைஸ்
அமீரிடம் பேசிய பிக்பாஸ், டிக்கெட் டு ஃபினாலேவை ஜெயித்து இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளீர்கள். எப்படி உணர்கிறீர்கள் என கேட்டார். அதற்கு பதிலளித்த அமீர், எனக்கு சந்தோஷமாக இல்லை. ஃபைனலில் வெற்றி பெற்றால் தான் சந்தோஷம் என்றார். இதற்காக அமீருக்கு பிக்பாஸ் அட்வைஸ் செய்தார்.

இதுக்கு தான் அழுதாரா
பிக்பாஸ் கூறுகையில், வாழ்க்கையில் அந்தந்த நிமிடங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை அனுபவிக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் நாளை நடப்பதும் சந்தோஷமாக இருக்கும். வருங்கால பிரபு தேவா என உங்களை கூப்பிடுவதை விட, வருங்கால அமீர் ஆக வேண்டும் என உங்களை பார்த்து மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அதை செய்து காட்டுங்கள் என்றார். இதை சற்றும் எதிர்பாராத அமீர், உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி அழுதார்.
Recommended Video

அப்போதே கேட்ட அமீர்
கடந்த வாரம் அமீர், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்றார். அப்போது பிக்பாஸ் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதைக் கேட்டு விட்டு, இப்போது கூட வருங்கால பிரபுதேவா என சொல்ல மாட்டீங்களா என பிக்பாசிடம் கேட்டார் அமீர். ஆனால் அமீர் அப்போது கேட்டதற்கு, அவரை ஊக்குவிக்கும் விதமாக பிக்பாஸ் நேற்று பேசினார்.


Click it and Unblock the Notifications











