காலில் வலி.. நெஞ்சில் வலிமை.. டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் நபராக ஃபைனல்ஸில் நுழைந்த அமீர்!
சென்னை: வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்த அமீர் முதல் நபராக பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் ஃபினாலே வாரத்திற்குள் நுழைந்துள்ளார்.
Recommended Video
முட்டை உடைக்கும் போட்டியை தவிர்த்து மற்றதெல்லாம் வெறும் வாய் விளையாட்டாக இருந்த நிலையில், கடைசி டாஸ்க் பிசிக்கல் டாஸ்க்காக மாற்றப்பட்டது பிக் பாஸ் ரசிகர்களை சற்றே ஆறுதல் அடைய செய்தது.
கொட்டும் மழையில் கடைசி வரை சிபி மற்றும் அமீர் போராடி வந்த நிலையில், சிபி கயிற்றை விட அமீர் ஃபினாலே டிக்கெட்டை வென்று விட்டார்.

ஒற்றைக் காலில் நின்றபடி
கடைசியாக நடந்த டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் சஞ்சீவ் வெளியேறிய நிலையில், இறுதி போட்டிக்கு சிபி மற்றும் அமீர் முன்னேறினர். மணல் மூட்டை கயிற்றை கையில் பிடித்துக் கொண்டு ஒற்றை காலில் நிற்க வேண்டும் என்கிற பிசிக்கல் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இருவருமே கடுமையாக போராடினார்கள்.

கொட்டும் மழையில் நனைந்து
சென்னை முழுக்க நேற்று மழை வெளுத்த நிலையில் பிக் பாஸ் வீட்டிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இந்த சீசனில் சற்றே மேடேத்தி செட் போட்டிருக்கிறார்களோ அல்லது வடிகாலை ஒழுங்காகம் அமைத்துள்ளார்களோ கடந்த ஆண்டு போல வீட்டுக்குள் வெள்ளம் வரவில்லை. கொட்டும் மழையில் அமீர் மற்றும் சிபி ஒற்றைக் காலில் அவ்வளவு நேரம் நின்றது நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

விட்டுக் கொடுக்காத சிபி
ராஜு மற்றும் பிரியங்காவை போல ஓவர் கான்ஃபிடன்ஸ் ஆக இல்லாமல் இறுதி வரை போட்டிக்கு உண்மையாக இருந்த சிபி இந்த டாஸ்க்கில் 1 மணி நேரம் 40 நிமிடங்களுக்கு மேல் தாக்குபிடித்தது பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால், கடைசியில் சிபிக்கு இந்த டிக்கெட் டு ஃபினாலே கிடைக்காதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வலியுடன் வலிமை
ஃப்ரீஸ் டாஸ்க்கின் போதே காலில் வலி ஏற்பட்ட நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கில் கடைசி வரை போராடி ஒற்றைக் காலில் வலியுடன் மன வலிமையை சேர்த்து அமீர் போராடியதை பார்த்து ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் அவரை பாராட்டினர். சிபி கயிற்றை விட்ட மறுகணமே பிக்பாஸ் பஸர் அடித்து அமீர் வெற்றி பெற்றார் என அறிவித்து விட்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் முதல் ஃபைனலிஸ்ட்டாக மாறி உள்ளார் அமீர்.


Click it and Unblock the Notifications











