»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை:

லகான் படத்தின் வெளிநாட்டு உரிமையைத் தர மறுத்த நடிகர் அமீர் கானை கொல்ல முயன்ற தாவூத் இப்ராஹிம்கூட்டாளிகள் 4 பேர் சுட்டுக் கொலை.

இதுகுறித்த விவரம் வருமாறு,

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி அபு சலீம்.இவர் மும்பையில் தங்கியிருந்து கொண்டு தாவூத் இப்ராஹிமின் கட்டளையை நிறைவேற்றி வருகிறார்.

லகான் படத்துக்கான வெளிநாட்டு உரிமையை தனக்கு தர வேண்டும் என தாவூத் இப்ராகிம் கும்பல் அமீர்கானிடம்மிரட்டியுள்ளது. ஆனால், இதை ஏற்க அமீர்கான் மறுத்துவிட்டார்.

இதையடுத்து இவரையும் இந்தப் படத்தின் டைரக்டர், பைனான்சியர் ஆகிய 3 பேரையும் கொல்ல தாவூத் இப்ராகிம்தனது கூட்டாளி அபு சலீமுக்கு உத்தரவிட்டான்.

இதையடுத்து இவர்களைக் கொல்ல அபு சலீம் தனது கூட்டாளிகளான தன்வீர் ஷேக், சாஜன் குமார், அப்துல் ஜமீல்மற்றும் ஜாவித் அகமது கான் ஆகியோருக்கு உத்தரவிட்டான்.

இந்த 4 பேரும் பந்த்ராவில் உள்ள அன்னை தெராசா பள்ளிக் கூடத்திற்கு அருகே தங்கியிருப்பதாக போலீசாருக்குத்தகவல் வந்ததது. இதையடுத்து நேற்றிரவு 2.30 மணிக்கு அந்த இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 4 பேரையும்சரணடைந்து விடுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.

ஆனால் அதற்கு அவர்கள் இணங்க மறுத்து போலீசார் மீது சுட ஆரம்பித்தனர். போலீசாரும் திரும்பிச் சுட்டனர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் அந்த தாவூத் கூட்டாளிகள் 4 பேரும்கொல்லப்பட்டனர்.

இவர்கள் இந்தி நடிகர் அமீர்கான், லகான் பட டைரக்டர் அசுதோஷ் கவாரிகர், பைனான்சியர் ஜாமு சுகந்த்ஆகியோரைக் கொல்லத்திட்டமிட்டு இருந்த விவரம் தெரியவந்துள்ளது.

கொல்லப்பட்ட 4 பேரிடம் இருந்த 2 வெளிநாட்டுத் துப்பாக்கிகள், 6 ரிவால்வர்கள் மற்றும் 1 நாட்டுத் துப்பாக்கிஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil