அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு.. விரைவில் குணமடைய ரசிகர்கள், பிரபலங்கள் பிரார்த்தனை

மும்பை: வரும் அக்டோபர் மாதம் வந்தால் அமிதாப் பச்சனுக்கு 80 வயது நிறைவடைய உள்ளது. இந்நிலையில், இரண்டாவது முறையாக அவருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியை இந்த வயதிலும் தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன்.

Recommended Video

Jailer Shooting ஆரம்பிச்சாச்சு, வெறித்தனமா காத்திருக்கும் ரசிகர்கள் *Kollywood

மேலும், அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.

அமிதாப் பச்சனுக்கு கொரோனா

அமிதாப் பச்சனுக்கு கொரோனா

பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமிதாப் பச்சனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு தனக்கு கொரோனா பாதித்துள்ளது என்றும், தன்னிடம் நெருங்கிய பழகியவர்களும் டெஸ்ட் செய்து கொள்ளுமாறு அமிதாப் பச்சனே ட்விட்டரில் அறிவித்துள்ளார். இந்த வயதிலும், தொடர்ந்து கோன் பனேகா குரோர்பதி, படங்கள் என ஓயாது நடித்து வருகிறார்.

இரண்டாவது முறை

இரண்டாவது முறை

கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் கொரோனா பரவல் நாட்டையே உலுக்கி எடுத்த வந்த போதும் அமிதாப் பச்சனுக்கு தொற்று பாதித்தது. அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சுமார் 3 வாரங்கள் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வந்தார். அப்போதும், தன்னுடைய உடல் நலன் குறித்த ஸ்டேட்டஸ்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தனது ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தார்.

குடும்பத்துக்கே கொரோனா

குடும்பத்துக்கே கொரோனா

அமிதாப் பச்சனுக்கு முதல் முறை கொரோனா பாதித்த போது அவரது மகன் அபிஷேக் பச்சனால் பாதித்ததாக தகவல்கள் வெளியாகின. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஐஸ்வர்யா ராயின் மகள் ஆராத்யா என ஒட்டுமொத்த குடும்பத்துக்கே கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்தனர். மீண்டும் அமிதாப் பச்சனுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ள நிலையில், குடும்பத்தினரும் பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் பிரார்த்தனை

ரசிகர்கள் பிரார்த்தனை

இந்திய சினிமாவின் மூத்த சூப்பர்ஸ்டார் நடிகர் அமிதாப் பச்சன் இரண்டாம் முறையாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில், அவர் வெகு விரைவாக பூரண குணமடைய வேண்டும் என ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு பெரிதாக இல்லை என்றும் மைல்டாகத்தான் உள்ளது என்றும் கூறப்படுகின்றன.

பிரம்மாஸ்திரம்

பிரம்மாஸ்திரம்

ரன்பீர் கபூர், ஆலியா பட் நடிப்பில் உருவாகி உள்ள பிரம்மாஸ்திரம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். அயன் முகர்ஜி இயக்கத்தில் அஸ்திரங்களின் ஆற்றல்களுடன் உருவாகி உள்ள இந்த பிரம்மாண்ட திரைப்படம் வரும் செப்டம்பர் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X