»   »  "செல்பி பர்ஸ்ட்... உச்சா நெக்ஸ்ட்".. பாத்ரூமில் வைத்து அமிதாப்பை "மிரட்டிய" ரசிகர்கள்!

"செல்பி பர்ஸ்ட்... உச்சா நெக்ஸ்ட்".. பாத்ரூமில் வைத்து அமிதாப்பை "மிரட்டிய" ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பை, பாத்ரூமில் வைத்து செல்பி எடுத்துக் கொள்ளலாம் எனக் கேட்டு மிரள வைத்துள்ளனர் சில ரசிகர்கள்.

மக்களைத் தற்போது செல்பி மோகம் பிடித்து ஆட்டி வருகிறது. எங்கு போனாலும், யாரைச் சந்தித்தாலும் செல்பி எடுத்துக் கொள்ளும் ஆசை அதிகரித்துள்ளது. அதுவும் பிரபலத்தைப் பார்த்து விட்டால் போதும், செல்போன் செத்துப் போகும் வரை செல்பி எடுத்துத் தள்ளி விடுகிறார்கள்.

ஆனால், இந்த செல்பி மோகம் சமயங்களில் ஆபத்தாக முடிந்து விடுவதும் உண்டு. அதே போல், இடம், பொருள் பார்க்காமல் செல்பி கேட்பதால் மற்றவர்களின் எரிச்சலுக்கும் ஆளாக நேரிடுகிறது.

இறுதிச்சடங்கில் செல்பி...

இறுதிச்சடங்கில் செல்பி...

அந்தவகையில், கடந்தாண்டு நண்பரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கச் சென்ற அமிதாப்பை இளைஞர்கள் கூட்டம் சுற்றி வளைத்து செல்பி கேட்டுள்ளனர். இதனால் வேதனை அடைந்தார் அமிதாப்.

வெறுப்பாக உள்ளது...

வெறுப்பாக உள்ளது...

இது குறித்து ‘இறந்துபோன மனிதருக்குக் கொஞ்சம்கூட மரியாதை தராமல் செல்பி எடுத்தவர்களைப் பார்க்கும்போது வெறுப்பாக உள்ளது' என தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

திரும்பவும்...

திரும்பவும்...

இந்நிலையில் கேட்கக் கூடாத இடத்தில் செல்பி கேட்டு அமிதாப்பை மீண்டும் வெறுப்பேற்றியிருக்கின்றனர் சில ரசிகர்கள். இம்முறை அமிதாப்பிடம் ரசிகர்கள் செல்பி கேட்டது வேறெங்குமல்ல... பாத்ரூமில்.

ஷாக்கான அமிதாப்...

ஷாக்கான அமிதாப்...

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டாராம் அமிதாப். இது குறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பாத்ரூமில் செல்பி...

பாத்ரூமில் செல்பி...

இதுகுறித்து அவர் கூறுகையில், "சமீபத்தில் ஒரு பாத்ரூமில் வைத்து எனக்கு செல்பி சிக்கல் வந்தது. ஒரு இடத்திற்குப் போயிருந்தபோது அங்குள்ள பாத்ரூமுக்குப் போய்த் திரும்பியபோது அட்டென்டர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி கேட்டனர். எனக்கு சங்கடமாகப் போய் விட்டது.

இங்க வந்துமா..?

இங்க வந்துமா..?

‘நம்மை ரிலாக்ஸ் செய்யப் போகும் இடத்தில் செல்பி கேட்டால் எப்படி... அந்த இடத்திற்கு எல்லோரும் ஏன் போகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே' என்று கேட்டுள்ளார் அமிதாப்.

English summary
It seems that megastar Amitabh Bachchan, who has a huge fan following around the world, has been followed by his fans everywhere. One such incident took place in a washroom when an “insane” fan asked the actor for a ‘selfie’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil