»   »  டெல்லியின் பிசியான சாலைகளில் ஜாலியாக நடந்த அமிதாப்: ஒரு புள்ளைக்கும் அடையாளம் தெரியலையே!

டெல்லியின் பிசியான சாலைகளில் ஜாலியாக நடந்த அமிதாப்: ஒரு புள்ளைக்கும் அடையாளம் தெரியலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் டெல்லியில் ஹாயாக சாலைகளில் நடந்து சென்றுள்ளார். அவரை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை என்பது தான் அதிசயம்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் சூஜித் சர்காரின் பிங்க் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இந்நிலையில் அமிதாப் பச்சன் பிங்க் படத்திற்காக போடப்பட்ட மேக்கப்புடன் முகத்தில் ஒரு மாஸ்க்கை அணிந்து டெல்லி சாலைகளில் ஹாயாக நடந்து சென்றுள்ளார்.

Amitabh Bachchan goes unrecognised on busy streets of Delhi: Know how?

அவரின் வயதான கெட்டப் மற்றும் மாஸ்க்கால் மக்கள் யாருக்கும் அது அமிதாப் பச்சன் என தெரியவில்லை.

Amitabh Bachchan goes unrecognised on busy streets of Delhi: Know how?

இது குறித்து அமிதாப் தனது பிளாக்கில் கூறியிருப்பதாவது,

கூட்டம் அதிகம் உள்ள டெல்லி சாலைகளில் நான் மாஸ்க் அணிந்து சென்றேன். என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை என்றார்.

அவர் சாலைகளில் நடந்து மட்டும் செல்லவில்லை பிசியான ஜங்ஷனில் சாலையை கடந்தும் சென்றுள்ளார். அமிதாப் எங்கு சென்றாலும் கூட்டம் கூடுகையில் இப்படி நடந்துள்ளது பலரையும் வியக்க வைத்துள்ளது.

English summary
Bollywood star Amitabh Bachchan walked on the streets of Delhi without being recognised.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil