»   »  மகா. முதல்வரைப் பார்க்க நின்றிருந்தால் தீ விபத்தில் சிக்கியிருப்பேன்... அமிதாப் உருக்கம்

மகா. முதல்வரைப் பார்க்க நின்றிருந்தால் தீ விபத்தில் சிக்கியிருப்பேன்... அமிதாப் உருக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து விட்டு செல்லலாம் என சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டிருந்தால், தீ விபத்தில் சிக்கியிருப்பேன் என மும்பை மேக் இன் இந்தியா தீ விபத்து குறித்து நடிகர் அமிதாப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிர அரசு சார்பில் மும்பை கிர்காவ் கடற்கரையில் கடந்த 14ம் தேதி மேக் இன் இந்தியா வார விழா நடைபெற்றது. அதில், நிகழ்ச்சியை ரசித்துக்கொண்டு இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது, மேடையில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக முதல்வர், கவர்னர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அமிதாப் நிகழ்ச்சி...

அமிதாப் நிகழ்ச்சி...

தீ விபத்து ஏற்படுவதற்கு சற்று நேரத்துக்கு முன்புதான் அதே மேடையில் அமிதாப் பச்சன் மற்றும் பாஜக எம்.பி.யும், நடிகையுமான ஹேமமாலினி ஆகியோரின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. தனது நிகழ்ச்சி முடிந்து அமிதாப் கிளம்பிய சிறிது நேரத்திலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

தீ விபத்து...

இந்த சம்பவம் குறித்து அமிதாப் தனது வலைதளப் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர், ‘மேடையில் எனது நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்திலேயே தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.

முதலமைச்சர்...

முதலமைச்சர்...

அங்கேயே இருந்து முதலமைச்சரைச் சந்திக்குமாறு என்னை சிலர் கூறினர். அவர்கள் பேச்சை கேட்டு அங்கேயே இருந்திருந்தால், தீயில் சிக்கி இருப்பேன்.

உடனடி நடவடிக்கை...

தெய்வாதீனமாக, உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் அனைவரையும் பயமுறுத்திவிட்டது' என அமிதாப் தெரிவித்துள்ளார்.

English summary
Taking to Twitter Amitabh Bachchan said that he escaped the fire by a narrow margin. "Production was wanting me to stay & go back on to meet the CM .. had I gone back would have been caught in fire .. providential"

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil