For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அமிதாப் பச்சனின்.. வித்தியாசமான நடிப்பில்.. குலபோ சித்தாபோ அமேசான் பிரைமில் !

  |

  லக்னோ : அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் இருவரும் சேர்ந்து கலக்கும் குலபோ சித்தாபோ ஃபன் ஃபில்டு டிரெய்லர் வெளியாகி உள்ளது. இந்த படம் ஜூன் 12 அமேசான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

  Amazon Prime ல் வெளியாகும் 7 படங்கள் | PonMagal Vandhal, Penguin

  பிங்க், அக்டோபர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சூஜித் சிர்கார் இப்படத்தை இயக்கி உள்ளார். சூஜித் சிர்கார் இயக்கிய விக்கி டோனர் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி படமாகும்.

  அமிதாப் பச்சன் "மிர்சா" என்ற கதாபாத்திரத்தில் லக்னோவில் ஒரு பழைய மேன்ஷனை நடத்திவரும் உரிமையாளராகவும், ஆயுஷ்மான் "பாங்கி " என்ற கதாபாத்திரத்தில் அந்த மேன்ஷனில் வசிக்கும் ஒரு வாடகைதாரராகவும் நடித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் வாக்குவாதம் , உரிமை போராட்டம் போன்றவற்றை மிகவும் அழகாக சொல்கிறது ட்ரைலர்.

  ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!ஷ்ரேயா பெல்லி டான்ஸ் பார்த்திருப்பீங்க.. இப்படி யோகா செஞ்சு பார்த்திருக்கீங்களா.. வேற லெவல்!

   வீட்டு உரிமையாளர்

  வீட்டு உரிமையாளர்

  லக்னோவில் உள்ள பழைய மேன்ஷனை நடத்தி வரும் மிர்சா அவர் தான் அந்த நிலத்தின் உரிமையாளரும் கூட. இந்நிலையில் அங்கு ஒரு சிறிய அறையில் பாங்கி என்பவர் ஒரு வாடகைதாரராக பல வருடங்களாக வசித்து வருகிறார். பாத்ரூமை பகிர்ந்து கொள்ளுதல் , வசதி வாய்ப்புகளை ஆராய்ந்து சண்டை போடுதல் என்று விறுவிறுப்பாக நகர்கிறது காட்சிகள் நகர்கிறது.

   வீட்டு பொருளை திருடும் மிர்சா

  வீட்டு பொருளை திருடும் மிர்சா

  ‘பாங்கி‘ பல நாட்களாகவே வீட்டின் வாடகையை சரிவர கொடுக்காமல் மிர்சாவிற்கு டிமிக்கி கொடுத்து வருகிறார். இதனால் இவனிடம் வாடகையை இப்படியெல்லாம் கேட்டால் வாங்க முடியாது என தெரிந்ததும் பாங்கியிடன் இருக்கும் ஒவ்வொரு பொருளையும் திருடி கொண்டுபோய் விற்றுவிடுகிறார் மிர்சா. அப்படி அதில் வரும் பணத்தில் மிர்சா தனது வாடகையை எடுத்து கொள்வார். பாங்கியின் மின்விளக்கு,பெரிய வாளி, ஆடு என கையில் என்னவெல்லாம் கிடைக்கிறதோ அனைத்தையும் கொண்டு விற்று விடுகிறார்.

   நீதிமன்றம் செல்கிறார்

  நீதிமன்றம் செல்கிறார்

  இவனிடம் எப்படியாவது வாடகை பணத்தை வாங்கிவிட வேண்டும் இல்லையேல் இவனை இந்த இடத்தை விட்டு விரட்டி விட வேண்டும் என தன்னால் ஆனா முயற்சியை எல்லாம் செய்கிறார் மிர்சா. ஆனால் பாங்கி எதற்கும் அசராமல் முடிந்ததை பார்த்துக்கொள் என்ற பாணியில் இருக்கிறார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மிர்சா பாங்கியிடம் வாடகை பணத்தை வாங்க சட்டபூர்வமாக சந்தித்து. பாங்கியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று முடிவு செய்து நீதி மன்றத்திற்கு செல்கிறார்.

   நகைச்சுவையான படம்

  நகைச்சுவையான படம்

  வழக்கறிஞர்களை மிர்சா சந்திக்கும் போது அவர்கள் இந்த இடத்தை விற்றுவிடுங்கள் உங்களுக்கு வேறு வழியில்லை என சொல்வார்கள். அதற்காக மிர்சா மேன்ஷனை விற்கும் வேலையில் இறங்குகிறார், அதனை பாங்கி எப்படியெல்லாம் தடுக்கிறார் என்பதை நகைச்சுவை கலந்து சொல்லி இருப்பார்கள். டிரைலரை பார்ப்பதற்கே மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது.

   அலட்டிக்கொள்ளாத நடிப்பு

  அலட்டிக்கொள்ளாத நடிப்பு

  டிரெய்லரின் கடைசியில் உனக்கும் மகன் என்று சொல்லி கொள்ளவும் யாருமில்லை, எனக்கும் அப்பா என்று சொல்லிக்கொள்ளவும் யாருமில்லை . நீங்கள் ஏன் என்னை மகனாக தத்தெடுத்துக்கொள்ள கூடாது என பாங்கி கேட்க கடுப்பான மிர்சா. அவரை அடிக்க பாய்வது போல டிரைலர் முடிவடைகிறது. மிர்சாவாக நடிக்கும் அமிதாப் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான மூக்குடன், தலையில் ஒரு துணியை போட்டுக்கு கொண்டு வயதான கதாபாத்திரத்தில் மிகவும் அலட்டிக்கொள்ளாமல் நடித்துள்ளார்.

   ஜூன் 12ல் ரீலிஸ்

  ஜூன் 12ல் ரீலிஸ்

  இப்படி பல பல காமெடி நிறைந்த , வறுமையின் பிடியில் இருக்கும் ஒரு சாமானியனின் பிரச்சனைகளையும் , ஈகோ செய்யும் மனரீதியான பிரச்சனைகள் என்று அன்றாட வாழ்க்கையில் நடக்கும் சுவாரஸ்யங்களை கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 12ந் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தை காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கிறார்கள்.

  English summary
  Amitabh Bachchan’s Gulabo sitabo Trailer release
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X