»   »  ஏம்மா, நான் வாழ்த்தினா பதில் சொல்ல மாட்டியா?: தனுஷ் தோழியிடம் கேட்ட சூப்பர் ஸ்டார்

ஏம்மா, நான் வாழ்த்தினா பதில் சொல்ல மாட்டியா?: தனுஷ் தோழியிடம் கேட்ட சூப்பர் ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ட்விட்டரில் அமிதாப் பச்சன், நடிகை சோனம் கபூரின் உரையாடல் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பாலிவுட் நடிகை சோனம் கபூர் கடந்த 9ம் தேதி தனது 32வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேரிலும், சமூக வலைதளம் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் சோனமை வாழ்த்தினார்.

சுனில் ஷெட்டி

தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டிக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டினார் சோனம் கபூர். சோனமின் ட்வீட் அமிதாப் பச்சன் கண்ணில் பட்டது.

ஏம்மா?

சோனம் சுனில் ஷெட்டிக்கு போட்ட ட்வீட்டை பார்த்த அமிதாப் பச்சன் கமெண்ட் போட்டிருப்பதாவது, அப்போ நான், இது அமிதாப் பச்சன் மை டியர்..உன் பிறந்தநாள் அன்று வாழ்த்தி எஸ்எம்எஸ் அனுப்பினேன், நீ பதிலே அனுப்பவில்லை என்றார்.

சோனம்

அமிதாபின் ட்வீட்டை பார்த்த சோனம் பதிலுக்கு ட்வீட்டியிருப்பதாவது, ஓ மை காட் சார்!! எனக்கு எஸ்எம்எஸ் வரவில்லை. நான் எப்பொழுதுமே பதில் அனுப்புவேன்! மிக்க நன்றி. ஜூனியர் பச்சன் மெசேஜ் கிடைத்தது. சாரி என்று தெரிவித்துள்ளார்.

க்யூட்

க்யூட்

அமிதாப் பச்சன், சோனம் கபூரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் ஆ,,,சோ ஸ்வீட், க்யூட் என்று கூறி வருகிறார்கள். அமிதாப் பச்சன் தக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The friendly banter between Amitabh Bachchan and actress Sonam Kapoor on twitter has caught the attention of many.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil