»   »  பனாமா பேப்பர்ஸ் விவகாரம்... மராட்டிய அரசின் காழ்ப்புணர்ச்சி!- அமிதாப்

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்... மராட்டிய அரசின் காழ்ப்புணர்ச்சி!- அமிதாப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் என் பெயர் வெளியான உடனே புலிகள் பாதுகாப்பு பிரச்சார தூதர் பதவியிலிருந்து என்னை நீக்க எழுந்துள்ள கோரிக்கைக்கு மராட்டிய அரசின் காழ்ப்புணர்ச்சிதான் காரணம் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அமிதாப் பச்சன் இன்று வெளியிட்டுள்ள இரண்டாவது விளக்க அறிக்கை:

சமீபத்தில் என்னைப் பற்றி சில நாளிதழ்களில் உண்மைக்கு புறம்பான வகையில் கட்டுரைகளும், செய்திகளும் வெளியிட்டு வருகின்றன.

Amitabh Bachchan surprised at name appearing in Panama Papers leak

அவற்றில் ஒருகட்டுரை தொடர்பான விவகாரத்தின் பின்னணியை வருமானவரித் துறையினரும், அமலாக்கத் துறையினரும் கடந்த ஆறேழு ஆண்டுகளாக விசாரித்து வருகின்றனர். இந்த நாட்டின் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில் இதுதொடர்பாக, அதிகாரிகளின் கேள்விகளுக்கும், நோட்டீஸ்களுக்கும் நான் உரிய வகையில் விளக்கம் அளித்துள்ளேன்.

தற்போது பனாமா பேப்பர்ஸ் என்ற கள்ளத்தனமான பணப் பரிவர்த்தனை தொடர்பாக வெளிவரும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு நிறுவனங்களிலும் நான் எந்தக் காலத்திலும் இயக்குநராக இருந்தது கிடையாது.

பனாமா நாட்டில் இந்திய பிரபலங்கள் குவித்து வைத்திருப்பதாக கூறப்படும் கருப்புப் பணம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த இந்திய அரசு உத்தரவிட்டுருப்பதை அறிந்து மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இந்த பட்டியலில் எனது பெயர் இடம்பெற்றிருப்பது எப்படி? என்பதை இந்த விசாரணையின் மூலம் அறிந்துக்கொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன்.

என்மீதான இந்த குற்றச்சாட்டுகள் வெளியானதில் இருந்து மராட்டிய மாநிலத்தின் புலிகள் பாதுகாப்பு பிரச்சார தூதர் பதவியில் இருந்து என்னை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இது, மராட்டிய மாநில அரசின் காழ்ப்புணர்வு நடவடிக்கை. அப்படி நடந்தால், அதை நான் தாழ்மையான மரியாதையுடன் ஏற்றுக் கொள்கிறேன்.

யார் எந்த முடிவை எடுத்தாலும், சமூக நலனுடன் தொடர்புடைய புலிகள் பாதுகாப்பு பிரச்சாரம், போலியோ ஒழிப்பு, தூய்மை இந்தியா திட்டம், காசநோய் ஒழிப்பு, ஹெபிடைட்டிஸ்-பி, நீரிழிவு விழிப்புணர்வு பிரசாரம், குடும்பக் கட்டுப்பாடு பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சாரங்களிலும் என்னுடைய தனிமனித உழைப்பு என்றென்றும் இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்பிகிறேன்.

English summary
Actor Amitabh Bachchan has clarified that he is not involved in any money laundering case, and see no reason why his name has been linked to Panama Papers leak.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil