»   »  இந்திய சினிமா துறையின் உயரிய விருது... அமிதாப் பச்சனுக்கு புதிய கவுரவம்!

இந்திய சினிமா துறையின் உயரிய விருது... அமிதாப் பச்சனுக்கு புதிய கவுரவம்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

கோவா: கோவாவில் நடக்க இருக்கும் திரைப்பட விழாவில் நடிகர் அமிதாப் பச்சனுக்கு 2017ன் ''சிறந்த திரைப்பட ஆளுமைக்கான விருது'' வழங்கப்பட இருக்கிறது. இது இந்திய சினிமாவில் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றாகும்.

கோவாவில் இந்த மாதம் 20ம் தேதி சர்வதேச திரைப்பட விழா தொடங்க இருக்கிறது. இது கோவாவில் நடக்கும் 48வது திரைப்பட விழாவாகும். இந்த விழா எட்டு நாட்களுக்கு நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Amitabh Bachchan will be feted with the Personality of the Year Award

மிகவும் பிரபலமான இந்த திரைப்பட விழாவிற்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சினிமா ஆர்வலர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இதில் கடைசி நாளான 28ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இந்த விழாவில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு 2017ன் ''சிறந்த திரைப்பட ஆளுமைக்கான விருது'' வழங்கப்படும். இது அவர் சினிமா துறைக்கு செய்த ஒப்பற்ற சேவையை பாராட்டுவதற்காக வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

English summary
Amitabh Bachchan will be feted with the Personality of the Year Award. He will get the award in upcoming 48th International Film Festival of India in Goa.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil