»   »  ட்விட்டரில் அமிதாப்புக்கு 2 கோடி ஃபாலோயர்கள்!

ட்விட்டரில் அமிதாப்புக்கு 2 கோடி ஃபாலோயர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாலிவுட்டின் சாதனை நடிகர் அமிதாப் பச்சனை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 2 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களாக் கொண்டவர் அமிதாப் பச்சன்தான்.

Amitabh having 2 cr followers in twitter

‘அடேங்ங்ங்கப்பா.. இரண்டு கோடி! அனைவருக்கும் நன்றி, இனி 3 கோடியை நோக்கி... உங்க நேரம் இப்போ ஆரம்பம்.." என்ற பதிவின் மூலம் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார் அமிதாப்.

கடந்த 2010-ம் ஆண்டு ட்விட்டரில் இணைந்தார் அமிதாப். அன்றிலிருந்து ட்விட்டரில் தீவிரமாக இயங்கிவரும் அவர் அவ்வப்போது தனது ஃபாலோயர்களுடன் உரையாடுகிறார்.

ட்விட்டரில் அமிதாப்-புக்கு அடுத்தபடியாக 1.86 கோடி அபிமானிகளுடன் நடிகர் ஷாரூக்கான், 1.69 கோடி அபிமானிகளுடன் நடிகர் ஆமிர் கான், 1.68 கோடி அபிமானிகளுடன் நடிகர் சல்மான் கான், 1.32 கோடி அபிமானிகளுடன் நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் உள்ளனர். தமிழகத்தில் அதிக ஃபாலோயர்களைக் கொண்ட பிரபலமாக ஏ ஆர் ரஹ்மான் உள்ளார்.

English summary
The number of followers for Amitabh in Twitter is raising to 2 cr.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil