»   »  ரஜினி பற்றி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

ரஜினி பற்றி உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ரஜினிகாந்த் மிகவும் எளிமையானவர் என்று பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு இன்று 75வது பிறந்தநாள். அவருக்கு திரையுல பிரபலங்கள், ரசிகர்கள், பிற துறைகளை சேர்ந்த பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

மருமகள் ஐஸ்வர்யாவின் தந்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்ததால் அமிதாப் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. அண்மையில் பேட்டி ஒன்றில் அமிதாப் பச்சன் தனது நண்பர் ரஜினிகாந்த் பற்றி பேசியுள்ளார்.

ஜென்டில்மேன்

ஜென்டில்மேன்

இந்திய சினிமாவின் சிறந்த கலைஞன் ரஜினிகாந்த். படப்பிடிப்பு தளத்தில் ரஜினி போன்று ஒரு கம்பெனி கிடைக்காது. பக்கா ஜென்டில்மேன் அவர் என்றார் அமிதாப்.

உழைப்பாளி

உழைப்பாளி

நானும், ரஜினிகாந்தும் நல்ல நண்பர்கள். ரஜினிகாந்த் கடுமையான உழைப்பாளி, திறமைசாலி, கடவுள் பக்தி அதிகம் உள்ளவர். அவரின் நம்பிக்கை தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தியுள்ளது என்று அமிதாப் தெரிவித்தார்.

தலைக்கனம்

தலைக்கனம்

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தலைக்கனம் இல்லா அடக்கமான மனிதர் ரஜினிகாந்த். ஆரம்ப காலத்தில் சினிமாவில் வெற்றி பெற்றபோது ரஜினி ஒரு ஃபியட் கார் வாங்கினார் என்று அமிதாப் கூறினார்.

எளிமை

எளிமை

ஆரம்ப காலத்தில் வாங்கிய ஃபியட் காரை அண்மை காலம் வரை ரஜினி வைத்திருந்தார். அந்த அளவுக்கு அவர் எளிமையானவர் என்று அமிதாப் பச்சன் புகழ்ந்தார்.

English summary
Bollywood actor Amitabh Bachchan praised his good friend Rajinikanth's hard work and simplicity.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil