»   »  'அம்மா', அச்'சோ'ன்னு கிடக்கும் தமிழ் திரையுலகம்

'அம்மா', அச்'சோ'ன்னு கிடக்கும் தமிழ் திரையுலகம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அம்மா இவ்வளவு சீக்கிரம் போய்விட்டீர்களே என்று தமிழ் திரையுலகம் கதறிய நேரத்தில் மேலும் ஒரு மூத்த கலைஞரை இழந்து நிற்கிறது.

அப்பல்லோ மருத்துவமனையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருக்கு போராடியபோது அதிசயம் நடந்து அவர் பிழைத்து வர வேண்டும் என்று தமிழ் திரையுலகம் இருகரம் ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை செய்தது.

பிராத்தனை செய்து கொண்டிருந்தபோதே அம்மாவின் உயிர் பிரிந்துவிட்டது.

சோகம்

சோகம்

என்ன அவசரம் அம்மா, அதற்குள் சென்றுவிட்டீர்களே என்று திரையுலகை சேர்ந்த பலரும் கண்ணீர்விட்டனர். ஜெயலலிதாவுடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டனர்.

சோ

சோ

தமிழ் திரையுலகின் பெரிய தூண் சாய்ந்துவிட்டதே என்று இருந்த நேரத்தில் பத்திரிகையாளரும், நடிகருமான சோ ராமசாமி இன்று காலமானார். இது என்னடா தமிழ் திரையுலகிற்கு வந்த சோதனை என்று இடிந்துபோயுள்ளனர் கலைஞர்கள்.

அச்சோ

அம்மா, அச்'சோ' என்பது தான் தமிழ் திரையுலகின் தற்போதைய புலம்பல். இதை பார்த்திபனின் கிறுக்கல் சரியாக தெரிவித்துள்ளது.
அச்'சோ'
அவருமா?

வருமா
மீண்டுமந்த
துக்ளக்கறிவு ?

ராதிகா

சோ ராமசாமி என்னை நரேந்திர மோடிஜியிடம் அறிமுகம் செய்து வைத்ததை நேற்று நானே நினைத்தேன். அவருக்காக பிரார்த்திக்கிறேன் என்று ராதிகா சரத்குமார் ட்வீட்டியுள்ளார்.

English summary
Kollywood is mourning for the loss of two legends of the industry named Jayalalithaa and Cho Ramaswamy.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil