»   »  'கடவுள் இருக்கான் குமாரு'... அம்மா கிரியேஷன்ஸின் சில்வர் ஜூப்ளி ரிலீஸ்- டி சிவா

'கடவுள் இருக்கான் குமாரு'... அம்மா கிரியேஷன்ஸின் சில்வர் ஜூப்ளி ரிலீஸ்- டி சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாடும் அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சிறப்பு வெளியீடாக வருகிறது கடவுள் இருக்கான் குமாரு படம்.

இதுகுறித்து தயாரிப்பாளர் டி சிவா கூறுகையில், "அம்மா கிரியேஷன் நிறுவனம் துவங்கி 25வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து விட்டேன்.

Amma Creations 25th year release 'Kadavul Irukkan Kumar'

இந்த 25வது வருடத்தில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தை தயாரிப்பது எனக்கு பெருமையாக உள்ளது.

இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100% மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர் நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும். இவர்களோடு இப்படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பன் பிரகாஷ் ராஜ் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடிக்க டப்பிங் செய்ய என எல்லாவற்றுக்கும் அவர் ஆர்வத்தோடு விமானத்தில் வந்து அவருடைய பணியை சரியாக முடித்துவிட்டுச் சென்றார். அவருக்கு நன்றி.

இப்படத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கரின் பாத்திரம் பேசப்படும். ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இனிமேல் இங்கு எல்லாமே கூட்டு முயற்சியில் தான் நடைபெறும். இப்படத்தில் என்னுடன் இனைந்து பணியாற்றிய சரவணனுக்கு நன்றி," என்றார் டி.சிவா.

English summary
Producer T Siva says that Kadavul Irukkan Kumaru movie is the silver jubilee release of Amma Creations.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil