»   »  அதிசயம் நடக்கட்டும்: 'அம்மா'வுக்காக இறைவனிடம் கையேந்தி நிற்கும் கோலிவுட்

அதிசயம் நடக்கட்டும்: 'அம்மா'வுக்காக இறைவனிடம் கையேந்தி நிற்கும் கோலிவுட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிசயம் நடந்து அம்மா பிழைத்து வர வேண்டும் என்று கோலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதியில் இருந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை இன்று மோசமாக உள்ளது. ஜெயலலிதாவின் நிலைமை மிக மிக மோசமாக இருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மா குணமடைய கோலிவுட் பிரபலங்கள் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். இது குறித்து அவர்கள் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

குஷ்பு

அனைத்தும் தோல்வி அடையும்போது அதிசயம் நடக்கும் என நம்புவோம். அதிசயம் நடக்க தமிழக முதல்வருக்காக இந்தியா பிரார்த்தனை செய்கிறது. சீக்கிரம் குணமடைந்து வாருங்கள் அம்மா.

விஜய் ஆண்டனி

அம்மா....
உங்களுக்கு எங்கள் குரல் கேட்கும் என நம்புகிறேன்.
Pls get well soon.....

வரலட்சுமி சரத்குமார்

அதிசயம் நடக்கும் என நம்புவோம்.. அம்மா திரும்பி வாருங்கள்...!!

விவேக்

வதந்திகள் பொய்.பிரார்த்தனை மெய்.எத்தனையோ கோடி இதயங்களில் வாழும் முதல்வரின் இதயத்தை, இறையே,நலம் பெறச் செய்.

ராய் லட்சுமி

டென்ஷனாக உள்ளது. அதிசயம் நடக்கும் என நம்புவோம். அம்மாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள.

English summary
Kollywood celebs are tensed and hoping for Miracle to happen for ailing CM Jayalalithaa.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil