»   »  கள்ளன் பட ஃபர்ஸ்ட் லுக்... வெளியிட்டனர் அமீர், ராம்!

கள்ளன் பட ஃபர்ஸ்ட் லுக்... வெளியிட்டனர் அமீர், ராம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கள்ளன் படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை வெளியிட்டனர் இயக்குநர்கள் அமீர் மற்றும் ராம்.

இயக்குநர்கள் அமீர், ராம் ஆகியோரிடம் உதவி மற்றும் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் சந்திரா. இவர் இயக்கும் முதல் படம் கள்ளன். எட்சட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் மதியழகன் தயாரித்துள்ளார்.


Ammer, Raam reveal first look of Kallan

தன் முதல் படத்தை மக்கள் வேட்டையாடிகளாக வாழ்ந்த காலகட்டத்தைக் களமாக வைத்து எடுத்துள்ளார் சந்திரா.


Ammer, Raam reveal first look of Kallan

கரு பழனியப்பன் நாயகனாக நடித்துள்ள இந்தப் படம் முழுக்க தேனி மாவட்டத்தின் மலை மற்றும் கிராமங்களில் எடுக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.


Ammer, Raam reveal first look of Kallan

படத்தின் முதல் தோற்றப் போஸ்டரை தனது குருநாதர்களான அமீர் மற்றும் ராமின் கைகளால் வெளியிட வைத்தார் சந்திரா. விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று மாலை இந்தப் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. போஸ்டர்களை வெளியிட்டு படத்தின் வெற்றிக்கு தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர் அமீரும் ராமும்.


Ammer, Raam reveal first look of Kallan

முதல் போஸ்டரே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தும் அளவுக்கு மிரட்டலாக அமைந்துள்ளதாக திரையுலகில் பேச்சு நிலவுகிறது.

English summary
The first look posters of Chandra's Kallan movie has been revealed by directors Ameer and Ram on Sep 5.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil