பொறாமையால் வெந்து புழுங்கும் அமுதவாணன்..விக்ரமன் மீது பாய்ச்சல்
பிக்பாஸ் வீட்டில் கலகம் ஆரம்பித்துவிட்டது. அனைத்து மட்டங்களிலும் தானே முதன்மையாக இருக்க வேண்டும் என நினைக்கும் அமுதவாணன் தனது சுயரூபத்தை காட்ட தொடங்கியுள்ளார்.
விக்ரமனை ஆரம்பத்தில் அனைவரும் ஒதுக்கியபோது அமுதவாணனுக்கு ஒரு டீம் இருந்தது. மைனா உள்ளிட்ட விஜய் டிவி டீம்கள் எதிராக நிற்க ஆரம்பித்து விட்டனர். இதனால் அமுதவாணனுக்கு தற்போதைய மாற்றம் கசப்பாக உள்ளது.
ஆடல் பாடல் டாஸ்க்கில் விக்ரமன் நல்ல பெயரை வாங்கியதிலிருந்து அமுதவாணனுக்கு பொறாமை ஆரம்பித்தது. தனக்கு மிகப்பெரிய போட்டியாளராக இருப்பாரோ என்கிற எண்ணத்தில் பிரச்சினையை தொடங்கி உள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் ஆரம்பமாகிவிட்டது பொறாமை பொச்சரிப்பு
பிக்பாஸ் வீட்டில் போட்டி பொறாமை, பொச்சரிப்பு ஆரம்பமாகிவிட்டது. பிக்பாஸ் வீட்டுக்கு வரும் போட்டியாளர்கள் ஆரம்பத்தில் அனைவரும் தங்களை நல்லவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும் காட்டிக்கொள்ள திறமையாக நடிப்பார்கள். கேமரா இருப்பதை ஞாபகத்தில் வைத்துக்கொண்டு நடப்பார்கள். ஆனால் நாள் செல்ல செல்ல சுயரூபம் வெளிப்பட தொடங்கும். ஆரம்பத்தில் ஆர்பாட்டம் செய்து நல்லவர்களாக காட்டிக்கொள்பவர்கள் அடுத்தடுத்த வாரங்களில் தங்கள் சுயநலம் வெளிப்படத்தொடங்கி அவமானப்பட்டு வெளியேறுவார்கள். ஆரம்பத்தில் கவனிக்கப்படாதவர்கள் பின்னர் நன்றாக செயல்பட்டு பேர் வாங்குவார்கள்.

மோதல் பார்ட்டிகள் மவுனம் காக்க அமைதி திலகங்கள் ஆட்டம் ஆரம்பம்
பிக்பாஸ் சீசன் 6-ல் வந்துள்ள போட்டியாளர்கள் ஆரம்பத்தில் மற்ற சீசன்கள் போல அதே குணநலனுடன் இருந்தார்கள். ஆரம்பத்தில் நட்புடனும், அன்புடனும் பழகினார்கள். பின்னர் போகபோக ஒவ்வொருவர் குண நலனும் வெளிப்பட தொடங்கியது. முதற்கட்டமாக அசீம், மகேஷ்வரி, அசீம்-அயிஷா, தனலட்சுமி - ஜி.பி.முத்து, தனலட்சுமி அசீம் என மோதல் வந்தது. அப்போதெல்லாம் அமுதவாணன், மைனா, ஏடிகே, கதிரவன், ராபர்ட் மாஸ்டர், ஷெரினா, அசல், ரச்சிதா உள்ளிட்டோர் அன்பு அணிபோல் சுற்றிக்கொண்டிருந்தார்கள்.

விக்ரமனின் விஸ்வரூபத்தை தாங்கிக்கொள்ள முடியாத அமுதவாணன்
போட்டிகள் கடுமையாகாதவரை அமுதவாணன் ஜாலியாக இருந்தார். பின்னர் நடக்கும் சண்டைகளில் ஏதாவது ஒருபக்கம் நிற்கும் நிலை ஏற்பட்டது. டீம் பிரிக்கும்போதே மைனா, மகேஸ்வரி, ஏடிகே, கதிரவன், ஷெரினா, மணிகண்டன் என ஒரு கோஷ்டியானார்கள். அமுதவாணன், ராபர்ட் மாஸ்டர், ஜனனி, ஷிவின், ரச்சிதா, விக்ரமன் ஒரு கோஷ்டியானார்கள். பொம்மை டாஸ்க்கில் அமுதவாணனுக்கும் மைனா கோஷ்டிக்கும் முட்டியதால் பிரச்சினை ஆரம்பித்து விக்ரமனுடன் நெருங்க ஆரம்பித்தார். ஆனால் டி.வி டாஸ்க் வரும்போது ஸ்க்ரிப்ட் எழுதுவது, கான்செப்ட், நாடகம் என விக்ரமன் தலையெடுத்தபோது அமுதவாணனால் தாங்க முடியவில்லை.

தான் மட்டுமே முதலிடத்தில் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் அமுதவாணனை பொறாமையில் தள்ளுகிறது
தான் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவதில் பிரச்சினை வந்ததை பார்த்து டாமினேட் செய்ய ஆரம்பித்தார் இதனால் பிரச்சினை வந்தது. விக்ரமன் புலம்ப ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கமல்ஹாசன் வாரா வாரம் விக்ரமன் தரப்பு சரி என்று சொல்ல ஆரம்பித்தவுடன் பொறாமையால் விக்ரமனை மட்டம் தட்ட ஆரம்பித்தார். பின்னர் கோபப்பட ஆரம்பித்தார். ஜனனி தனலட்சுமி போன்றோரை வைத்து விக்ரமன் அறுக்கிறார் என்றெல்லாம் கருத்தை உருவாக்கினார். இதில் எல்லாம் விக்ரமன் கோபப்படாமல் ஸ்கோர் செய்ததால் அவர் வேலை செய்யவில்லை என எப்போதும் இல்லாத அளவுக்கு பிக்பாஸ் வீட்டில் சத்தம் போட்டு திட்ட ஆரம்பித்தார்.

ஷிவினை உருவக்கேலி செய்த அமுதவாணன்..தட்டிக்கேட்ட விக்ரமன்
இன்று ஷிவினை பற்றி உருவக்கேலி செய்தார் அமுதவாணன், அதை விக்ரமன் தட்டிக்கேட்டவுடன் மீண்டும் அவருடன் சண்டைக்கு போனார். யாருக்காக விக்ரமன் சண்டை போட்டாரோ அந்த ஷிவின் விக்ரமனை அறுக்கிறீர்கள் என்று சொன்னார். தற்போது தனக்கு முக்கியத்துவம் குறைகிறது, தனக்கு மிகப்பெரிய போட்டியாளராக விக்ரமன் வந்து ஆரி போல் கோப்பையை வெல்லவும் வாய்ப்பு இருக்காதோ என்கிற பயத்தில் ஆரம்பத்திலேயே விக்ரமனை மட்டம் தட்டிவந்தால் சக ஹோம்மேட்ஸ்கள் வெறுப்பார்கள் என திட்டம் போட்டு அமுதவாணன் காய் நகர்த்துவதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











