Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமுதவாணன்... பைனலுக்கு முன் நடந்த சுவாரஸ்யம்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடைசி கட்ட பரபரப்பான சூழலில் சென்று கொண்டிருக்கிறது, டைட்டில் வின்னருக்கான இறுதிப் போட்டியில் 6 பேர் விளையாடி வந்தனர்.
விக்ரமன், ஷிவின், அசீம், கதிர், அமுதவாணன், மைனா ஆகிய 6 பேர் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த நிலையில் கதிர் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
இதனையடுத்து டைட்டில் வின்னர் ரேஸில் இருந்த 5 பேருக்கு பிக் பாஸ் பணப் பெட்டியுடன் இன்னொரு வாய்ப்பு கொடுத்தார்.
விருப்பம் உள்ள போட்டியாளர் ஒருவர் கார்டன் ஏரியாவில் இருக்கும் பணப் பெட்டியுடன் வெளியேறலாம் என பிக் பாஸ் அறிவித்திருந்த நிலையில், தற்போது ஒருவர் அதனை எடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த
வீட்டுக்கே
பெருமை...
வந்த
வேலை
முடிஞ்சிடுச்சு...
ஷிவினுக்கு
பிக்
பாஸ்
கொடுத்த
சர்ப்ரைஸ்

பிக் பாஸ் சீசன் 6 இறுதி வாரம்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிர் ஆகிய 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக கதிர் ரூ.3 லட்சம் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ள மற்ற 5 போட்டியாளர்களுக்கும் பிக் பாஸ் இன்னொரு வாய்ப்பை கொடுத்திருந்தார்.

இறுதி வாய்ப்பாக பணப்பெட்டி
இந்த முறை கார்டன் ஏரியாவில் பணப் பெட்டியை வைத்த பிக் பாஸ், ஒவ்வொரு முறையும் அதன் வேல்யூவை ஏற்றிக் கொண்டே சென்றார். பிக் பாஸ் கொடுத்த இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு யார் வெளியேறப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். நிச்சயமாக டைட்டில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கும் விக்ரமனும் அசீமும் பணப் பெட்டி குறித்து யோசிக்கவே இல்லை. ஆனால், அமுதவாணன், மைனா, ஷிவின் மூவரும் கொஞ்சம் குழப்பமாகவே இருந்தனர்.

அமுதா கொடுத்த அதிர்ச்சி
அதேநேரம் பணப் பெட்டியின் வேல்யூ 10 லட்சத்துக்கு அதிகமானால் எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக அமுதவாணன் கூறிவந்தார். இறுதியாக அதுவே நடந்துள்ளதாக தெரிகிறது. பணப் பெட்டியின் வேல்யூ அதிகரித்துக்கொண்டே சென்ற நிலையில், 13 லட்சம் வந்ததும் அமுதா பஸ்ஸர் அடித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் பணப் பெட்டியில் இருந்த 13 லட்சம் ரூபாய் பணத்துடன் அமுதவாணன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம்.

ஆல் இன் ஆல் அமுதா
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பம் முதலே அனைத்துவிதமான போட்டிகளிலும் வெறித்தனமாக விளையாடி வந்தார் அமுதா. பிசிக்கல் டாஸ்க்கில் அமுதாவின் ஆட்டம் வேறலெவலில் இருந்தது. அதேபோல் காமெடி செய்து ஹவுஸ்மேட்ஸ்களை கலகலப்பாகவும் வைத்திருந்தார். முக்கியமாக எவிக்சன் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட வாரத்தில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வென்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்று கெத்து காட்டினார். இதனால் ரச்சிதா எவிக்சன் ஆனதும் குறிப்பிடத்தக்கது. இப்படி பல தடைகளை கடந்து பைனல் ரேஸில் அடியெடுத்து வைத்து அமுதா 13 லட்சம் பணப் பெட்டியுடன் வெளியேறியது நல்ல முடிவு என்றே ரசிகர்களும் கூறி வருகின்றனர்.