Don't Miss!
- Lifestyle
குழந்தைகள் விரும்பி சாப்பிடும்... கேரட் சட்னி
- Sports
எங்க கிட்டயும் படைகள் இருக்கு..கேஜிஎப் வசனத்தை பேசிய பாட் கம்மின்ஸ்..இந்திய அணிக்கு பாராட்டு
- News
செந்தில் முருகனுக்கு அதிமுகவில் முக்கிய பதவி.. ‘கைம்மாறு’ செய்யும் ஓபிஎஸ்.. அப்போ கன்ஃபார்மா?
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
திருப்பாச்சி விஜய் ஆக மாறிய ஜிபி முத்து.. கலாய்த்த அமுதவாணன்.. அடிவாங்காம விடமாட்டாரு போல!
சென்னை: அமுதவாணன் ஜி.பி.முத்துவை காலையிலிருந்து கலாய்த்து கொண்டிருக்கிறார்.
திருப்பாச்சி படத்தில் முகத்தில் நடிகர் விஜய் சந்தனம் பூசி சண்டைப் போட்ட காட்சியையும் கம்பேர் செய்து ஜிபி முத்துவை அமுதவாணன் கலாய்த்தார்.
மேலும், ஜிபி முத்துவின் உயரத்தை வைத்து கிண்டல் செய்ய, நீயும் செருப்பை கழட்டு யாரு ஹைட்டுன்னு பார்த்துடலாம்னு கோபத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார் ஜிபி முத்து.
திவ்யா கண்ணீர் குற்றச்சாட்டு..சர்ச்சையில் சிக்கிய சீரியல் நடிகருக்கு போலீஸ் சம்மன்!

திருப்பாச்சி விஜய் போல
ஜிபி முத்து முகத்தில் சந்தனம் பூசியதை பார்த்த அமுதவாணன் "என் தலைவன் விஜய் திருப்பாச்சியில் முகம் முழுவதும் சந்தனம் பூசி இருப்பது போல் பூசிக்கொண்டு திரிகிறாய், விஜய் எதிரிகளை பந்தாடினார் நீ என்னன்னா எறும்பு, ஈக்களை அடித்து கொண்டிருக்கிறாய் என்று கலாய்த்தார்.

ஆவி ஆகிடுவ
செத்து ஆவி ஆகிடிவியா என அமுதவாணன் கலாய்க்க, ஆமாம் ஆவி ஆகிவிடுவேன், பேயாகிவிடுவேன், பிசாசு, காட்டேரி என ஏகப்பட்ட ஐட்டங்களை அடுக்கி அமுதவானனை ஆஃப் செய்து விட்டார். ஜிபி முத்துவின் முகத்தில் இருந்த சந்தனத்தை துடைக்க கையை முகத்துக்கு அருகே கொண்டு வந்ததும் ஜிபி முத்து கடுப்பாகி விட்டார். என்ன பிக் பாஸ் எனக்குன்னே வந்து சேருதுங்க என தனது வாயை ரொம்பவே கன்ட்ரோல் செய்து பேசும் காட்சிகள் எல்லாம் செம ரகளை.

நீ என்ன ஆறடி உயரமோ
பின்னர் ஜி பி முத்து போட்டு இருந்த உயரமான செருப்பை சுட்டிக்காட்டை அமுதவாணன் கலாய்க்க கடுப்பான ஜி பி முத்து என்ன நீ என்னமோ ஆறடி உயரம் இருக்கிற மாதிரி என்ன கலாய்க்கிற என்னை விட ஒரு இன்ச் தான் உயரம் இருப்ப, வா அப்படின்னு கூப்பிட்டு ஷுவ கழட்டிட்டு நில்லு என்று நிக்க வைத்து ராபர்ட் மாஸ்டரை நடுவராக வைத்து இப்ப சொல்லுங்க யாரு எவ்ளோ உயரம் இருக்கிறார் என ஜிபி முத்து கேட்க மாஸ்டர் மழுப்பலாக பதில் சொல்ல ஜிபி முத்துவுக்கு வணக்கத்த போடு என ரசிகர்கள் சோஷியல் மீடியாவையே கூல் சுரேஷ் மோடுக்கு மாறி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சாது மிரண்டால்
சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல ஜிபி முத்துவின் இன்னொசன்ஸை வைத்து அமுதவாணன் கலாய்த்து ஸ்கோர் செய்யலாம் என நினைத்துக் கொண்டிருக்க, தெளிவாத்தான் தம்பி இங்கே வந்திருக்கேன் என ஒவ்வொரு விஷயத்திலேயும் இறங்கி அடித்து விளையாடி வருகிறார். விரைவில் இவர்கள் இருவருக்குள்ளும் பயங்கரமாக முட்டிக் கொள்ளும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.