Don't Miss!
- Lifestyle
சமையலறையில் இந்த பொருட்களை தவறான இடத்துல வெச்சுடாதீங்க.. இல்ல நிறைய பிரச்சனையை சந்திப்பீங்க..
- Sports
ஹர்திக், ஷமி நடத்திய வேட்டை.. விழிப்பிதுங்கி நின்ற நியூசி, வீரர்கள்.. 2வது ODIல் இந்தியா அபார வெற்றி
- News
கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க.. கமலாலய வாசலில் காத்திருந்த அதிமுக தலைகள்? ட்ரெண்டாகும் #saveadmk
- Finance
ஆதார் கார்டு: NRI-களுக்கு ஆதார் ஏன் அவசியம்..? அப்ளை செய்வது எப்படி..?
- Automobiles
வீலிங், சேஸிங்னு எதுவுமே பண்ண வேண்டாம்... இத ஓட்டிட்டு போனாலே உங்கள வச்ச கண்ணு வாங்காம பாப்பாங்க!
- Technology
இந்திய அரசு போட்ட புது உத்தரவு.! செய்யவே மாட்டோம்னு சொன்ன Jio, Airtel, Vi.! என்னாச்சு தெரியுமா?
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
அடேங்கப்பா.. இப்படி போஸ் கொடுத்தா ரசிகர்கள் என்ன ஆவாங்க.. நீச்சல் உடையில் மிரட்டும் எமி ஜாக்சன்!
சென்னை: நடிகை எமி ஜாக்சன் மீண்டும் இயக்குநர் விஜய் இயக்கத்தில் புதிதாக ஒரு தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் இணைந்து வாழ்க்கை நடத்தி வந்தார்.
ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில், எமி ஜாக்சனை விட்டு பிரிந்துச் சென்றார் ஜார்ஜ். மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ள எமி ஜாக்சன் தற்போது இன்ஸ்டாவில் வெள்ளை நிற பிகினி உடையில் படு ஹாட்டாக போஸ் கொடுத்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
ஃபுல்
ரொமான்ஸ்..புது
காதலருடன்
நச்சுனு
லிப்
லாக்..
டிரெண்டாகும்
எமி
ஜாக்சன்
போட்டோஸ்!

லண்டன் டு சென்னை
இங்கிலாந்து நடிகையான எமி ஜாக்சன், இயக்குநர் ஏ.எல். விஜய்யின் மதராசப்பட்டினம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தாண்டவம், கெத்து, தெறி, ஐ, 2.0 மற்றும் தங்கமகன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், தெலுங்கு மற்றும் சில இந்தி படங்களிலும் நடித்து அசத்தினார். எமி ஜாக்சன் அழகுக்காகவே அவருக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்தன.

கல்யாணம் ஆகாமல் குழந்தை
கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக வலம் வந்த எமி ஜாக்சன் திடீரென இங்கிலாந்து நாட்டின் தொழிலதிபர் ஜார்ஜ் பன்னாயுட்டுவை நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நிலையில், திருமணம் செய்யாமல் அவருடன் குழந்தை பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். ஆண் குழந்தை பிறந்து சில ஆண்டுகளிலேயே மனைவியை விட்டு பிரிந்து சென்றார் ஜார்ஜ் பன்னாயுட்டு.

நடிகருடன் காதல்
எமி ஜாக்சன் தற்போது ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட் விக் என்பவரை காதலித்து வருகிறார். லண்டனில் இருவரும் டேட்டிங் சென்ற புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் தீயாக பரவின. சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது கூட எட் வெஸ்ட் விக் எமி ஜாக்சன் மற்றும் அவரது குழந்தையுடன் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தமிழில்
எமி ஜாக்சன் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு எமி ஜாக்சன் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இங்கிலாந்தில் சில வெப் தொடர்களில் நடித்து வரும் எமி ஜாக்சன் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

வெள்ளை நிற மோனோகினி
கடல் அருகே தனது காதலருடன் ஜாலியாக விளையாடிக் கொண்டிருக்கும் போது வெள்ளை நிற மோனோகினியில் எமி ஜாக்சன் சோலோவாக நிற்கும் போட்டோ தான் தற்போது சோஷியல் மீடியாவில் வேறலெவலில் டிரெண்டாகி வருகிறது. புதிய காதலருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தி வரும் எமி ஜாக்சன் குழந்தையையும் தனது கஸ்டடியில் வைத்து பார்த்துக் கொள்கிறார்.