»   »  ரஜினிக்கு யாரை பார்த்தால் கை, கால் உதறும்: ரகசியத்தை கசியவிட்ட ஏமி

ரஜினிக்கு யாரை பார்த்தால் கை, கால் உதறும்: ரகசியத்தை கசியவிட்ட ஏமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மீடியாவை கண்டால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு படப்படப்பு ஏற்படும் என்று நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஷங்கர் இயக்கி வரும் 2.0 படத்தில் ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஏமியும் பாலிவுட் நடிகர் சல்மான் கானும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி மற்றும் 2.0 பற்றி ஏமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ரஜினி

ரஜினி

ரஜினி மிகவும் அமைதியானவர், அடக்கமானவர். நானும், ரஜினியும் சேர்ந்து வரும் காட்சியை படமாக்கினார்கள். அந்த காட்சியில் நடிக்க சந்தோஷமாக உள்ளது என்று நான் அவரிடம் தெரிவிக்க அவரோ எனக்கு பதட்டமாக உள்ளது என்றார்.

மீடியோ

மீடியோ

எனக்கு மீடியா மற்றும் அனைவரின் கவனம் என் மீது இருப்பது பதட்டத்தை அளிக்கும் என்று ரஜினி என்னிடம் கூறினார். நீங்க ஒரு சூப்பர் ஸ்டார் சார் என்றேன் அவரோ ஆனால் எனக்கு பதட்டம் ஏற்படும் என்று கூறினார்.

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார்

ரஜினி பல ஆண்டுகளாக திரைத்துறையில் உள்ளார். இன்னும் உச்சத்தில் இருக்கிறார். இருப்பினும் அவர் தலைக்கனம் இல்லாதவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பார். அது தான் முக்கியம்.

அக்ஷய்

அக்ஷய்

நானும், ரஜினியும் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. அக்ஷய்குமாருடன் வரும் காட்சிகள் இன்னும் படமாக்கப்படவில்லை. ரஜினி அமைதியானவர். அக்ஷய் அதற்கு நேர் எதிரானவர். அவர் ஜாலியாக பேசிக் கொண்டு ஜோக்கடிப்பார்.

நினைக்கவில்லை

நினைக்கவில்லை

இங்கிலாந்தில் இருந்து வந்து அக்ஷய் மற்றும் ரஜினியுடன் சேர்ந்து நடிப்பேன், திறமையானவர்களுடன் பணியாற்றுவேன் என நான் நினைத்தது கூட இல்லை. என் இந்தி ஓகே. ஆனால் என் தமிழ் பரவாயில்லை என நினைக்கிறேன். தமிழ் வார்த்தைகள் எனக்கு நினைவில் உள்ளன.

English summary
Actress Amy Jackson, who has teamed up with superstar Rajinikanth 2.0, says he gets nervous with the media and attention.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil