»   »  சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஏமி ஜாக்சன்

சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்ட ஏமி ஜாக்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏமி ஜாக்சன் தனது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளார் என்று சிரிக்கிறது கோலிவுட்.

இங்கிலாந்தை சேர்ந்த ஏமி ஜாக்சன் பாலிவுட், கோலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இதற்காக அவர் சென்னை, மும்பையில் வீடு வாங்கியுள்ளார்.


தமிழ் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தவே சென்னையில் வீடு வாங்கியுள்ளார் ஏமி.


2.0

2.0

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகள் ஏங்கிக் கிடக்க ஷங்கரின் 2.0 படம் மூலம் அந்த பாக்கியம் ஏமிக்கு கிடைத்தது. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாக சொதப்பிவிட்டார்.


ஷங்கர்

ஷங்கர்

ஷங்கர் இயக்கத்தில் நடிக்க நடிகைகள் ஏங்கும்போது அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றியுள்ளார் ஏமி. ஆனால் தேவையில்லாத விஷயங்களை செய்து ஷங்கரை கடுப்பேற்றியுள்ளார்.


ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்தபோது தமிழர்களின் கோபப் பார்வை பீட்டா அமைப்பின் உறுப்பினரான ஏமி பக்கம் திரும்பியது. பீட்டாவை விட்டுடுமா என்று ஷங்கர் கூறியும் ஏமி கேட்கவில்லை.


ஏமி

ஏமி

பீட்டா அமைப்பை விட்டு விலக மறுத்த ஏமி அண்மையில் அந்த அமைப்புக்காக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். 2.0 படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று சிலர் கூறி வருவது ஷங்கரை கவலை அடைய வைத்துள்ளது.


வாய்ப்பு

வாய்ப்பு

ஏமிக்கு தமிழ் மற்றும் இந்தியில் புதுப்பட வாய்ப்புகள் இல்லை. பீட்டாவாலேயே ஏமிக்கு தமிழில் வாய்ப்பு இல்லை. இந்தியில் அவர் சல்மான் கானை தோஸ்து பிடித்தும் ஒன்னும் நடக்கவில்லை.


கன்னடம்

கன்னடம்

மார்க்கெட் சுத்தமாக படுத்துவிட்டதால் மிகக் குறைவான சம்பளத்திற்கு கன்னட படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஏமி. பீட்டாவுக்கு விசுவாசமாக இருந்து சினிமா வாழ்க்கைக்கு சூனியம் வைத்துக் கொண்டுள்ளார் ஏமி.English summary
Kollywood directors are not ready to cast Amy Jackson in their movies as she is a member of PETA. The PETA connection is affecting her career in Kollywood.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil