இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸாம்மா..?' - வைரலாகும் எமி ஜாக்சன் ட்விட்டர் வீடியோ!
Recommended Video

சென்னை : நடிகைகளின் உடைகள் இப்போது ஃபேஷன் என்ற பெயரில் கொடூரமாகி வருகின்றன. படங்களில் அழகாகத் தெரியும் பல ஹீரோயின்கள் பட விழாக்களில் வித்தியாசமான கெட்டப்களால் மீம் மெட்டீரியல் ஆகிவிடுகிறார்கள்.
அதற்கு சமீபத்திய உதாரணம், 'அஞ்ஞாதவாசி' இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்த கீர்த்தி சுரேஷின் கெட்டப் தான். நடிகைகள் போட்டோஷூட் செய்து வெளியிடும் புகைப்படங்களை சிலர் வரவேற்றாலும் பலர் என்ன உடை என்று தான் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகை எமி ஜாக்சன் BAFTA 2018-ம் ஆண்டின் விருது விழாவில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தான் அணிந்திருந்த உடையை காரில் போகும்போதே வீடியோ எடுத்து அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவை பார்த்த சிலர் அவரைப் பாராட்டினாலும் சிலர் அந்த உடையை விமர்சித்துள்ளனர். ஃபேஷன் என்ற பெயரில் அழகாகவும், பொருத்தமாகவும் இல்லாத உடைகளையே நடிகைகள் பெரும்பாலும் அணிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











