Don't Miss!
- Finance
5 ஆண்டுகளில் 4 மடங்கு FDI வளர்ச்சி.. கெத்து காட்டும் பார்மா துறை.. பொருளாதார ஆய்வறிக்கையில் பளிச்!
- Technology
உலகத்தை மீண்டும் திரும்பி பார்க்க வைக்கப்போறாங்க.! Nothing Phone 2 பற்றி தீயாய் பரவும் செய்தி.!
- News
ரூ 10 கோடி கொடுக்காட்டி என்னை கொன்று விடுவாராம்.. 3வது மனைவி ரம்யா மீது நடிகர் நரேஷ் பாபு புகார்
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஷாக்.. வெற்றிமாறனின் படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து..ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் பலி
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படப்பிடிப்பு தளத்தில் ரோப் கயிறு அறுந்து விழுந்து சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தார்.
ஜெயமோகனின் துணைவன் நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் விடுதலை.
இந்த படத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஒரு
கூட்டு
கிளியான
வெற்றிமாறன்,
வெங்கட்
பிரபு,
பா
ரஞ்சித்…
விஜய்
ஆண்டனி
வெளியிட்ட
மேக்கிங்
வீடியோ!

விடுதலை
அசுரன் திரைப்படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. நகைச்சுவை நடிகராக இருந்த சூரி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். படத்தின் கதை சூரி நடித்துள்ள கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தை சுற்றியே இருந்தாலும், வாத்தியாராக நடித்துள்ள விஜய்சேதுபதியின் கேரக்டரே பிரதானமே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இசையஞானி இளையராஜா இசையில்
இசையஞானி இளையராஜா இசையமைத்து வரும் இந்த படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இயக்குனர் கௌதம் மேனன், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து நடித்து வரும் இந்த படத்தை. எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பெரும் வரவேற்பை பெற்றது..

விறுவிறுப்பான படப்பிடிப்பு
இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சத்திய மங்கலம்,சிறுமலை, கொடைக்கானல் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கியுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், படத்தின் ஒரு சண்டை காட்சி மட்டுமே எஞ்சி இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் விபத்து
இந்நிலையில், விடுதலை திரைப்படத்தின் சண்டைக்காட்சிக்காக சென்னை புறநகர் பகுதியான வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரி பகுதியில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் ரோப் கயிறில் தொங்கியபடி, சண்டை பயிற்சியாளர் சுரேஷ் நடித்துக்கொண்டு இருந்தார். அப்போது ரோப் கயிறு அறுந்து விழுந்ததில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் படுகாயம் அடைந்தார்.

சண்டை பயிற்சியாளர் உயிரிழப்பு
இதையடுத்து பதறிப்போன படக்குழுவினர் சுரேஷை அருகில் இருந்த மருத்துவமனையில் நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பின் போது உயிர் பலியாகி இருப்பது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த சண்டை பயிற்சியாளர் சுரேஷ் குடும்பத்திற்கு வெற்றிமாறன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.