கூலி டெலிட்டட் சீனாம்.. ஏஐ மூலமா ரஜினிக்கு எப்படியொரு ஜோடியை உருவாக்கியிருக்காங்க பாருங்க!

சென்னை: விரைவில் ஒரு படத்தின் டீசர் மற்றும் டிரெய்லரை வைத்து ஏஐ மூலம் முழு படத்தையும் கூட உருவாக்கி விடுவார்கள் போல தெரிகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வந்தாலே டீசரும் ரெடியாகி விடும் என்று தான் தோன்றுகிறது.

கூலி படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடி இல்லை என்றதும் சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, அமீர்கான், ஸ்ருதிஹாசன், அவரோட 2 தங்கைகள் என யாருக்குமே ஜோடியே வேண்டாம் என்கிற முடிவுடன் லோகேஷ் கனகராஜ் படத்தை எடுத்திருப்பார்.

An AI edited fanmade Coolie Flashback Deleted Scene goes viral
Photo Credit:

செளபின் சாஹீருக்கு மட்டும் ஜோடி இருக்கும், ஆனால், அதுவும் வேறமாதிரி இருக்கும். இந்நிலையில், கடைசியாக ரஜினிகாந்தின் மனைவியின் போட்டோவை கிளைமேக்ஸில் காட்டும் ஒரு ஷாட்டை லோகேஷ் வைத்திருப்பார். தற்போது அதை வைத்து ஏஐ எடிட்டர்கள் தரமான ஒரு கூலி ஃபிளாஷ்பேக் டெலிட்டட் சீன் என ஒரு வீடியோவையே உருவாக்கி வைரலாக்கியுள்ளனர்.

ஏகப்பட்ட ட்ரோல்கள்: கூலி படத்தின் அந்த பிணம் எரிக்கும் சேரில் இருந்து தொடங்கி கடைசியில் அமீர்கான் வந்து துண்டு பீடிக்கு விளம்பரம் செய்வது வரை அனைத்தையுமே பிரித்து மேய்ந்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இந்த முறை ரைட்டிங்கில் ரொம்பவே சொதப்பி விட்டார் என்றும் அதிக எதிர்பார்ப்புடன் வந்த ரசிகர்களை ஏமாற்றி விட்டார் என்றும் அவரிடம் இதற்கு மேல் சரியான சரக்கு இல்லை. ஆனாலும், மேலும், பெரிய படங்களை அவரை நம்பி எப்படித்தான் கொடுக்கிறார்களோ என்றும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஃபிளாஷ்பேக் போர்ஷன் தரம்: கூலி படத்தில் இடம்பெற்ற ரஜினிகாந்தின் ஃபிளாஷ்பேக் போர்ஷனை லோகேஷ் கனகராஜ் டீ ஏஜிங் செய்து எடுத்தாரா? அல்லது ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடுத்தாரா என ஏகப்பட்ட டீகோடிங் எல்லாம் ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருக்க படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லையே என்று கேட்கும் ரசிகர்களுக்காக ரஜினிக்கு அந்த படத்தில் ஜோடி இருந்து அது ஃபிளாஷ்பேக்கில் வந்தால் எப்படி இருக்கும் என்பதை ரசிகர் ஒருவர் ஏஐ மூலம் செய்த நிலையில், அது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கூலி டெலிட்டட் ஃபிளாஷ்பேக்: ரஜினிகாந்த் நடித்த கூலி படத்தில் அவரது மனைவி என காட்டப்படும் போட்டோவில் நடிகை ஷோபனா மற்றும் ரஜினிகாந்தின் சிறு வயது புகைப்படம் இருக்கும். அதை வைத்து தற்போது ஏஐ டெக்னாலஜியுடன் உருவாக்கி ஒரு டெலிட்டட் ஃபிளாஷ்பேக்கையே கொடுத்துள்ளனர். மேலும், தளபதி படத்தில் இடம்பெற்ற "சுந்தரி கண்ணால் ஒரு சேதி" பாடலையும் பேக்கிரவுண்டில் போட்டு சூப்பர் ஸ்டார் 50 ஆண்டுகால கொண்டாட்டத்திற்கு இந்த வீடியோ ஒரு tribute எனக் கூறியுள்ளனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்: கூலி படத்தில் லோகேஷ் இப்படியொரு ஃபிளாஷ்பேக் ரொமான்ஸ் சீன் வைத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும் என்றும் இதை ஏஐ உதவியுடன் க்ரீயேட் செய்த ரசிகருக்கு வாழ்த்துகள் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கூடிய சீக்கிரமே சன் பிக்சர்ஸ் கூலி படத்தின் 500 கோடி போஸ்டரை வெளியிட வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெயிலர் படம் 525 கோடி வசூல் செய்த போஸ்டரை சன் பிக்சர்ஸ் கடைசியாக வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் குழந்தைகளையும் கூலி படத்தை பார்க்க அனுமதி கிடைக்கவுள்ள நிலையில், குடும்பத்துடன் கூலி படத்தை ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடினால் வசூல் டபுள் ஆகிவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X