“நான் தான் சிஎம்“ அரசியலில் குதிக்கும் பார்த்திபன்.. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே சும்மா அள்ளுதே!
சென்னை: நடிகரும், இயக்குநருமான பார்த்திபன், தனுஷ் இயக்கி நடித்து இருக்கும் 'இட்லி கடை' படத்தில் அறிவு என்கிற கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படம் அக்டோபர் 1ந் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போது பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். படத்தின் பெயரைப் பார்த்த பலர், இந்த நேரத்திற்கு ஏற்ற பெயரைத்தான் வைத்து இருக்கிறார் பார்த்திபன் என அவரை பாராட்டி வருகின்றனர்.
இயக்குனர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பார்திபன் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். இயக்குநராக மட்டுமில்லாமல் அந்த படத்தில் ஹீரோவாகவும் நடித்திது பெயர் எடுத்தார். அந்த படத்திற்கு அவரின் கதாபாத்திரம் பக்காவாக பொருந்தி இருந்தது. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, உள்ளே வெளியே, ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை என அடுத்தடுத்து படத்தை இயக்கினார். அதில் அவர் இயக்கிய ஹவுஸ்புல் திரைப்படம் தேசிய விருதை பெற்றது.

இயக்குநர் பார்த்திபன்: அதே போல, ஒத்த செருப்பு, இரவின் நிழல், டீன்ஸ் என வித்தியாசமான கதையை சிந்தித்து அதை திரைப்படமாக திரையில் காட்டுவதில் கைதேர்ந்த இயக்குநர் பார்த்திபன் தனது அடுத்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். "நான் தான் சிஎம்" என்ற அரசியல் திரைப்படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை அவரே எழுதி இயக்குவதுடன், சிங்காரவேலன் என்ற முதலமைச்சர் வேட்பாளர் கதாப்பாத்திரத்தில் அவரே நடிக்க உள்ளார்.
நான் தான் சிஎம்: பார்த்திபன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தைரியமான வாசகத்துடன் அவருடைய ஸ்டைலில் வெளியிட்டார்.
பெரியோர்களே, தாய்மார்களே,
வாக்காளப் பெருமக்களே!
ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன் . என்னை உட்கார வைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்தப் பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக் கூடாது என்பது தான்!
போடுங்கம்மா ஓட்டு
Boat'சின்னத்தைப் பாத்து!
இப்படிக்கு,
C. M . சிங்காரவேலன் எனும் நான்....
'சோத்துக் கட்சி' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவினைப் பார்த்த பலர் தமிழகத்தில் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அதற்கு ஏற்ற அரசியல் கதை என பார்த்தினை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











